கேரட் -சென்னா-பீஸ்  -கிரவுண்ட்நட்ஸ் ரைஸ்



என்னென்ன தேவை?

அரிசி - 200 கிராம்,
கேரட் - 200 கிராம்,
வேர்க்கடலைப் பருப்பு - 100 கிராம்,
பச்சைப் பட்டாணி  50 கிராம்,
வெள்ளை கொண்டைக்கடலை - 50 கிராம்,
தேங்காய் - 1, (தேங்காய்ப் பால் எடுக்க),
துருவிய தேங்காய் - 1/4 மூடி,
கொத்தமல்லி இலை - சிறிது.

வதக்க...

எண்ணெய் - தேவைக்கு,
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - 3,
கிராம்பு - 2,
பிரிஞ்சி இலை - 1,
கறிவேப்பிலை - சிறிது,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 4,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தனி வத்தல் பொடி - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கறிமசால் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு. 

எப்படிச் செய்வது?

வேர்க்கடலைப் பருப்பு, பச்சைப் பட்டாணி, கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.அரிசியில் தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊற வைக்கவும்.அரிசி யில் விடுவதற்கு, ஒரு தேங்காயை எடுத்து, தேவையான தேங்காய்ப் பாலை மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு மசாலா சாமான்களைப் போட்டு கறிவேப்பிலை சேர்க்கவும். நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரையில் வதக்கவும். கேரட்டை லேசாக தோல் சீவி, கழுவி வட்ட வட்டமாக வெட்டி அதில் சேர்க்கவும்.

கேரட் லேசாக வதங்கியதும், ஊறிய அரிசியை சேர்த்து வதக்கவும். பொடி வகைகளைச் சேர்க்கவும். ஊறிய பருப்பு வகைகளைச் சேர்த்து உப்பு சேர்க்கவும். தேங்காய்ப் பால் விட்டு குக்கரை மூடவும். விசில் வந்தபின் இறக்கவும். இப்போது தேங்காய்த் துருவலையும் கொத்தமல்லி இலையையும் தூவி பரிமாறவும். சுவையான, சத்துகள் நிறைந்த, மணமணக்கும் கேரட் சத்துணவு சாதம் தயார்.