மாங்காய் பருப்பு



தேவையான பொருட்கள்

மாங்காய் பொடியாக நறுக்கியது - 1, பாசிப்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - 6, அரிந்த இஞ்சி - 2 ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன், வெந்தயம் - 1/2 ஸ்பூன், கடுகு - 1/2 ஸ்பூன், உ.பருப்பு - 1 ஸ்பூன், தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன், உப்பு - சுவைக்கு.

செய்முறை

குக்கரில் சுத்தம் செய்த பாசிப்பருப்பு, நறுக்கிய மாங்காய், மஞ்சள் தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். வெந்தவுடன் அதை மசித்து அதில் கடுகு, வெந்தயம், உ.பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து உப்பு சேர்த்து வதக்கவும். சுவையான மாங்காய் பருப்பு தயார். சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆகவும் பயன்படும்.