மாங்காய் கட்லெட்



தேவையான பொருட்கள்

துருவிய மாங்காய் - 1 கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, வெங்காயம் - 1/2 கப், கேரட் - 1/2 கப், இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன், ஓட்ஸ் - 100 கிராம், கொத்தமல்லி - 1/2 கப், பிரட் தூள் - 1/2 கப் (அ) ரவை, உப்பு, மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, எள் (அல்லது) கசகசா - 1 ஸ்பூன்.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் நன்கு வதக்கவும். பின் அதில் துருவிய மாங்காய், கேரட், உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் தூள் சேர்த்து கெட்டியாக பிசையவும். பின் தேவையான வடிவத்தில் தட்டி, பிரட் தூள் (அல்லது) ரவையில் பிரட்டி, தவாவில் இருபுறமும் பிரட்டி எடுக்கவும் (அ) Deep ஃப்ரையும் செய்யலாம். சுவையான மாங்காய் கட்லெட் தயார்.