மாங்காய் சாபுதான



தேவையான பொருட்கள்

துருவிய மாங்காய் - 1 கப், கேரட், கோஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், கொத்தமல்லி எல்லாம் அரிந்து தலா - 2 கப், நைலான் ஜவ்வரிசி - 1/2 கிலோ, க.பருப்பு, உ.பருப்பு - 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடலைக்காய், கைப்பிடி எள் - 2 ஸ்பூன், தனியா - 2 ஸ்பூன்,  வறுத்து கரகரப்பாய் பொடிக்கவும். உப்பு, மஞ்சள் தூள் - சுவைக்கு, ஊற வைத்த ப.பருப்பு - 50 கிராம், எண்ணெய் - 1 கரண்டி.

செய்முறை

ஜவ்வரிசியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு 30 நிமிடம் மூடி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் வதக்கி, அத்துடன் துருவிய காய்களை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் ஊற வைத்த ஜவ்வரிசி, பயத்தம்பருப்பு சேர்த்து பிரட்டவும். பின்பு இறக்கும்போது பொடி செய்து வைத்துள்ள பொடிகளை மேல் தூவவும். துருவிய மாங்காய் சேர்த்து பிரட்டவும். சுவையான, வித்தியாசமான சாபுதான (ஜவ்வரிசி) மாங்காய் தயார்.