தேங்காய், மாங்காய், அவல் உப்புமா



தேவையான பொருட்கள்

சிகப்பு கெட்டி அவல் - 300 கிராம், துருவிய மாங்காய் -1 கப், ப.மிளகாய் - 6, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - 1 கொத்து, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் தலா - 1 ஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி - தேவைக்கு, எண்ணெய் - 4 ஸ்பூன், கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, கடலைக்காய் - தேவைக்கு. தேங்காய் துருவல் - 1 கப்.

செய்முறை

கெட்டி அவலை சுத்தம் செய்து 1 டம்ளர் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வைக்கவும். (ஊறியவுடன்  மிக்சியில் கரகரப்பாய் பொடித்துக் கொள்ளவும்) வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, கடலைக்காய் வறுத்து, நறுக்கிய ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அத்துடன் வெந்தய பொடி, அவல், மாங்காய் துருவல், தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டவும். சுவையான உப்புமா ரெடி. (தேவைப்பட்டால் வெங்காயம் சேர்க்கலாம்).