காடை மஞ்சூரியன்



தேவையான பொருட்கள்

காடை - 1,
வெங்காயம் - 1,
குடை மிளகாய் - 1,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 துண்டு,
மைதா - 50 கிராம்,
சோள மாவு - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை

முதலில் காடையை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின்பு மைதா, சோள மாவு சேர்த்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் நல்லா கெட்டியாக தண்ணீர் ஊற்றி கலக்கி எண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ெணய் ஊற்றவும். பின்பு அதனுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி சாஸ் போட்டு அதனுடன் அைர டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு சோள மாவு போட்டு திக் பண்ணவும். வறுத்த காடை போட்டு எடுக்கவும். உப்பு போட்டுக்கொள்ளவும்.