ஜென்ட்ரல் டோஸ்ட் சிக்கன்



தேவையான பொருட்கள்

இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 2 பல்,
காய்ந்த மிளகாய் - 5,
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்,
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்,  
ஒய்ஸ்டர் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
சர்ஜிகரை - 1/2 டீஸ்பூன்,
போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்,
மைதா - 50 கிராம்,
கார்ன்ப்ளவர் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை


சிக்கனில் மைதா, கார்ன் மாவு, உப்பு போட்டு பிசைந்து எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். பின்பு ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின்பு நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் அதனுடன் சோயா சாஸ், வினிகர், சர்க்கரை  ஒய்ஸ்டர் சாஸ், அரைத்த காய்ந்த மிளகாய் போட்டு கொதிக்க விடவும். பின்பு  கார்ன் மாவு போட்டு திக் பண்ணவும். பின்பு வறுத்த சிக்கனை போடவும். ஜென்ட்ரல் டோஸ்ட் சிக்கன் ரெடி.