செஸ்வான் சிக்கன்



தேவையான பொருட்கள்

சிக்கன் - (நறுக்கிய துண்டுகள்) 200 கிராம்,
மைதா - 3 டீஸ்பூன், கார்ன் பிளவர் - 2 டீஸ்பூன்,
முட்டை - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 50 கிராம் (அரைத்தது),
வெங்காயம் -1,
கேப்சிகம் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 1,
எண்ணெய் - 1/2 லிட்டர்,
உப்பு - தேவைக்கு,
தக்காளி சாஸ் - சிறிது.

செய்முறை

முதலில் வாணலியில் எண்ணெயை ஊற்றவும். பிறகு நறுக்கிய சிக்கன் துண்டுகளுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று நீர் விட்டு பிசைந்து வாணலியை இறக்கவும். சிக்கன் துண்டுகள் பொரிந்தவுடன் எடுத்து தனியாக வைத்துவிட்டு தனி வாணலியில்  மீண்டும் சிறிதளவு  (50 கிராம் மில்லி எண்ணெய்) விட்டு, பூண்டை போட்டு வதக்கவும். உடன் வெங்காயம், தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாயை போட்டு உடன் தக்காளி சாஸ் சேர்க்கவும். கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும். பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும்.