பானகம்



தேவையான பொருட்கள்

வெல்லம் - 150 கிராம்,
இஞ்சி -10 கிராம்,
ஏலக்காய் - நான்கு,
எலுமிச்சைப் பழம் - ஒன்று.

செய்முறை

நீரில் வெல்லத்தை கரைக்கவும். பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும். ஒரு சிட்டிகை பொடித்த இஞ்சியை சேர்க்கவும். சுவை பெற தேவையான அளவிற்கு எலுமிச்சையை பிழியவும். குளிர்ந்த பிறகு பரிமாறவும்.