முந்திரி பனீர் ஜாமூன்



தேவையான பொருட்கள் :

முந்திரி துண்டுகள் - அரை கப்,
துருவிய பனீர் - இரண்டு கப்,
சர்க்கரை - ஐந்து கப்,
மஞ்சள் கலர் - சிறிதளவு,
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
நெய் - தேவைக்கேற்ப.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வந்தவுடன் இறக்கவும்.  பனீர் , ஏலக்காய் தூள் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டையின் நடுவில் சிறிது முந்திரி துண்டுகள் வைத்து மூடி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து, சர்க்கரை பாகில் நனைத்து, ஊறியதும் எடுத்து பரிமாறவும்