நாவை சுண்டி இழுக்கும் இனிப்புகள்



உணவுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது இனிப்பு வகைகள். பெரும்பான்மையான மக்கள் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இனிப்புகளை கடைகளிலே வாங்கி உண்கிறார்கள். ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் இனிப்புகளுடன் பேரன்புடன் கொண்டாடப்படுவதே நமது பாரம்பரியமாக இருந்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றாலே அலாதி பிரியம்.

தரமான முறையில், மெறுக்கேற்றும் சுவையில் அனைவரும் விரும்பும் இனிப்பு வகைகளை உங்கள் வீட்டிலே செய்து சாப்பிட்டு மகிழ சென்னையை சேர்ந்த சமையல் கலைஞரும், சத்துணவு நிபுணருமான திவ்யா 30 வகையான இனிப்பு வகைகளை தோழி வாசகர்களுக்கு செய்து காட்டுகிறார். நல்ல சுவையான இனிப்புகள் வாங்க கடைகளுக்கு செல்ல வேண்டாம். எளிமையான முறையில் வீட்டிலே செய்து புதிய புதிய இனிப்புகளை நீங்களும் செய்து கொடுத்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மகிழ்விக்கலாம்.

தொகுப்பு : ஜெ.சதீஷ்