சிக்கன் கட்லெட்



என்னென்ன தேவை?

எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,
பெரிய  உருளைக்கிழங்கு - 2,
பெரிய வெங்காயம் - 2,
கொத்தமல்லி - 1 கைப்பிடி, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
 கரம்மசாலாத்தூள், மிளகுத்தூள், மட்டன் அல்லது சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
முட்டை - 2, பிரெட் தூள் - 4 பிரெட்.

எப்படிச் செய்வது?

சிக்கனை வேக வைத்து ஆறியதும் அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த சிக்கன், உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கிளறி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கட்லெட் வடிவத்தில் செய்து முட்டை கலவையில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.