வெஜிடபிள் மோமோஸ்



என்னென்ன தேவை?

மோமோஸ் செய்ய...


மைதா - 1 கப்,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவைக்கு.

ஸ்டஃப்பிங் செய்ய...

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், வெங்காயத்தாள் - யாவும் சேர்த்து 1 கப்,
பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 2,
லைட் சோயாசாஸ் - 1½ டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, எண்ணெய், உப்பு கலந்து நன்கு பிசைந்து எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடி வைக்கவும்.கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு வதக்கி, அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கி, உப்பு,  மிளகுத்தூள், சோயா சாஸ், சிறிது தண்ணீர் ஊற்றி அரைவேக்காடாக வேகவைத்து, வெங்காயத்தாள் தூவி இறக்கி  ஆறவைக்கவும்.மைதா மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, குட்டி சப்பாத்தியாக தேய்த்து, நடுவில்  காய்கறி கலவையை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுத்து மோமோஸ் சாஸுடன் பரிமாறவும்.

மோமோஸ் சாஸ் செய்ய...

பெங்களூர் தக்காளி - 2, காய்ந்தமிளகாய் - 4 இரண்டையும் வேகவைத்து வடிகட்டி, தக்காளியின் மேல் தோலை உரித்து, அதனுடன் பூண்டு, 1 கைப்பிடி வெங்கா யத்தாள், உப்பு, சோயா சாஸ் 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன்  சேர்த்து அரைக்கவும். சாஸ் ரெடி.