செஷ்வான் சில்லி பொட்டேடோஸ்



என்னென்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு - 4,
சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கட்டு,
பூண்டு - 6,
வெங்காயம் - 1 ,
உடைத்த காய்ந்தமிளகாய் - 5,
ஒன்றிரண்டாக பொடித்த முழு குறுமிளகு - 1/2 டீஸ்பூன்,
ரெட் சில்லி பேஸ்ட், சோயா சாஸ் - தலா 1 டீஸ்பூன்,
சர்க்கரை - ’1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


உருளைக்கிழங்கை  தோல் சீவி நீளநீளமாக வெட்டி, தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து அரைவேக்காடாக வேகவைத்து வடிகட்டவும். அதன் மீது சோள மாவு தூவி, சூடான எண்ணெயில்  மொறுமொறுப்பாக பொரித் தெடுக்கவும். மீதியுள்ள சோள மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். கடாயில்  எண்ணெயை காயவைத்து காய்ந்தமிளகாய், மிளகுத்தூள் போட்டு அரை நிமிடம் வதக்கி, பூண்டு, வெங்காயம் சேர்த்து  வதக்கவும். பின் ரெட் சில்லி பேஸ்ட், சோயா சாஸ், சர்க்கரை, உப்பு, பொரித்த உருளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி,  சோள மாவு கரைசல் சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு வெங்காயத்தாள் தூவி இறக்கி பரிமாறவும்.