ப்ரியங்களுடன்...



* குழந்தையின்மை அதிகரித்து வரும் இந்நாளில், அதற்கான தீர்வுகள் உள்ளது என்பதை இயன்முறை மருத்துவர் தெளிவாக எடுத்துரைத்தார்.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

* பனை ஓலையில் பளிச்சிடும் ஓவியங்கள் கண்டு பிரமித்தேன்.
-  ஜி.ராஜேஸ்வரி, சென்னை.

* தம்பதிகள் குறை தீர்க்கும் பொன்மலை பெருமாளின் கருணையினையும், சிறப்புகளையும் படித்து எம்பெருமானை சென்று தரிசிக்க ஆயுத்தமாகிவிட்டோம்!
- கே.எல்.பகவதி, சென்னை.

*இன்று பல வீடுகளில், அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தக் கூடிய இன்வெட்டர்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்திய தகவல்கள் மிகவும் தேவைக்குரியதாகும்.
- ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்.

* வானத்தில் பறந்து கொண்டே சாப்பிடலாம், பர்த்டே கொண்டாடலாம். அடேயப்பா எவ்வளவு பிரமிப்பு… நினைக்கவே புல்லரிக்கிறது. இதை படிக்கும் போது நானும் ஒருநாள் சென்று வர தீர்மானித்தேன்.
- வண்ணை கணேசன், சென்னை.

* வாழைத்தண்டின் மூலம் இத்தனை அயிட்டங்களை சுவையாகச் சமைக்க முடியும் என்பதை அறிந்தபோது மலைப்பு ஏற்பட்டது.
- இரா.ரெங்கசாமி, வடுகபட்டி.

* தான் வடிவமைக்கும் ஃபேப்ரிக் புடவைகளுக்கு தானே மாடலாக நின்று ‘ஹிதயா’ என்ற பெயரில் ஆர்ட் கேலரி நடத்திவரும் ரமா ராஜேஷின் முயற்சி அபாரமானது பாராட்டுகள்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

* பெண்களுக்கான பிரத்யேக பயணக் குழுவை சீருடனும், சிறப்புடனும் வழிநடத்தி வரும் மோகனப்பிரியாவின் துணிச்சல் வலிமையானது.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

* கருவுற்ற தாய்மார்களுக்கென பிரத்யேகமான வண்ணம் தீட்டும் புத்தகத்தை வடிவமைத்து பல தாய்மார்களின் நம்பிக்கையை பெற்றுள்ள சந்தியா தசரதன் போற்றப்பட வேண்டியவர்.
- கோகிலாராஜு, திருவாரூர்.

* சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதன் மூலம் வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழலச் செய்து முன்னேற்றம் கண்டுள்ள புதுக்கோட்டை பெண்களின் வளர்ச்சி நிலை மற்ற மாவட்டப் பெண்களுக்கு சிறந்த வழிகாட்டி.
- செ.சோனிகா, கரூர்.

*மகளிர் குழுவால் சிறு தொழில் செய்யும் கிராமத்துப் பெண்களை பார்த்ததும் பெருமையாக இருக்கிறது.
- பானுமதி வாசுதேவன், மேட்டூர்.

அட்டைப்படம்: பூஜா ஹெக்டே