ப்ரியங்களுடன்...



நாப்கின்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவையும் கருத்தில் கொண்டு அதற்கு தீர்வு
கண்டிருக்கும் இஷானாவை பாராட்டுவதோடு அவரின் மறுசுழற்சி நாப்கினை அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்றும் உறுதி கொண்டோம்.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

‘நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்’ முழுமையான வழிகாட்டல் அற்புதமான பகுதி. பீட்ரூட் ஒரு சிலருக்கு ஏனோ இனம்புரியாத ஓர் விருப்பமின்மையைக் கொடுக்கும். அந்த எண்ணத்தைப்போக்கி ‘பீட்ரூட்’ மீது பிரியம் ஏற்பட வைத்தது, ‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்’ .- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

ஆப்கானிஸ்தான் பெண்கள் இந்தியாவில் அதுவும் சென்னையில் ராணுவப் பயிற்சி பெறுவதும், அவர்கள் சல்மான்கான், அக்‌ஷய் குமார் ரசிகைகள் என்றதும் மெரீனா பீச் பிடிக்கும், பானிபூரி ரொம்ப இஷ்டம் என்றதும், மத துவேஷமான குடியுரிமை மசோதா கொழுந்து விட்டு எரியும் தருணத்தில் மனதுக்கு ஆறுதலாகவும், ஆனந்தமாகவும் இருந்தது.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

மனதில் தைரியம் தொழிலில் சுறுசுறுப்பு இருந்தால் போதும் எல்லா தொழிலிலும் முன்னேறலாம் என்பதற்கு சான்று தள்ளுவண்டியில் பலகாரம் விற்கும் கலைவாணி. ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா அன்றைய காலத்தில் என்னென்ன ஊட்டச்சத்து சாப்பிட்டோம், இன்று மறந்து விட்டோம். அவை மீண்டும் நாம் சாப்பிட வேண்டும் என்பதை நினைவு படுத்தியுள்ளார்.
- பொன்னியம்மன் மேடு வண்ணை கணேசன், சென்னை.

உணவே மருந்து பகுதியில் வெங்காயம் பற்றிய பல அரிய மருத்துவ தகவல்களை படித்தபின் வெங்காயம் மீது இருந்த விலைவாசி பற்றிய பயமே விட்டுப்போச்சு!
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

அபிநய சரஸ்வதி சரோஜாதேவியின் திரைப்பட சுவராஸ்யம் மிக்க பக்கங்களை படித்தேன், சுவைத்தேன், மகிழ்ந்தேன்.
- எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.

வெற்றிலையைப் பற்றி படித்தபோது அதில் இத்தனை மருத்துவ குணங்களா என்று வியந்தேன். அதன் எண்ணிலடங்கா மருத்துவப் பலன்கள் அதனை சர்வரோக சிரஞ்சீவியாகக் காட்டுகின்றது. அது வெத்து இலை அல்ல. வெற்றி தரும் இலை!
- எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.

பதிப்பகத்துறையிலும், அறிவியல் துறையிலும், கல்வி சம்பந்தப்பட்ட பொதுச்சேவையிலும் முன்னணியில் இருக்கும் ராஜேஸ்வரியின் உழைப்பு அசாத்தியமானது. அவரது சேவை ஆல்போல தழைத்து ஓங்க வாழ்த்துகிறோம்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

பாரம்பரிய பண்டிகை சுவைமிகு புத்தாண்டு மற்றும் பொங்கல் ரெசிபிகள் நாவின் நற்சுவை அரும்புகளை சுண்டி விட்டது. பிரமாதம்...
- கவிதா சரவணன், திருச்சி.

2019 சாதனைப் பெண்களின் பட்டியல், 2020-ல் நாமும் சாதிக்க வேண்டுமென்ற உத்வேகமூட்டியது. முயற்சி திருவினையாக்கும் என்ற குறிக்கோளும், கடவுள் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பி.கே.சி.கன்சல்டிவ் ரத்தன் தீப் ரமேஷ் ஆலோசனை, என்னுைடய 2020 புத்தாண்டு டைரிக்கான பொன்மொழியானது.
- அ.யாழினி பர்வதம், சென்னை - 78.

அட்டைப்படம்:  நயன்தாரா