ப்ரியங்களுடன்



கிர்த்திகாவின் தன்னம்பிக்கையும், நோயிலிருந்து கணவரை மீட்டெடுத்த அவரது துணிச்சலையும் வியந்து பாராட்டுவதோடு, அவரது வாழ்க்கை பலருக்கு உத்வேகம் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கோயம்புத்தூர் மாணவர்களின் சாதனையை படித்து வியந்தோம்.ஆளி விதையை, அதன் முழு பலன் தெரிந்ததால் அவசியம் உணவில் சேர்த்து ஆரோக்கியம் காக்க உறுதி கொண்டோம். தடைகளை தகர்த்து பட்டங்களை சூடியுள்ள மகேஸ்வரியைப்பற்றி படித்து வியந்தோம்.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

இந்த இதழுடன் இலவச இணைப்பாக வெளிவந்த ‘இனிப்பும், காரமும்’ தந்து எங்களை இன்பக் கடலில் ஆழ்த்தி விட்டீர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...
- கே.விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி.

ஷுபாங்கியின் Pee Easy கண்டுபிடிப்பு பற்றி படித்தேன், வியந்தேன், மனம் களித்தேன். ‘‘ஹாட்ஸ் ஆப் டு ஷுபாங்கி.’’
- கே.ராணி, சென்னை.

தோழி இதழ் மூலம் முற்றிலும் மாறுபட்ட திரைப்படமான சண்டேஸ் அண்ட் சைபிள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்
பெற்றேன்.
- ப.மூர்த்தி, ெபங்களூரு-97.  

‘என் பாதை தனித்துவமானது’ கவிதா நரசிம்மனின் நோக்கம் தனிச்சிறப்புடையது. வாழ்வில் நலிந்தவர்களை ஏற்றம் காணச் செய்வதாக உள்ளது. பாராட்டுகள்! ‘கிச்சன் டைரீஸ்’ இப்பகுதி உணவு, ஆரோக்கியம், வாழ்க்கை முறை, உணவுப் பொருட்களைக் கையாளும் விதம் அனைத்தும் அட்சரம் பிசகாமல் எடுத்துரைக்கிறது.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு மெட்ரோ ப்ரியா என் சமையல் அறையில் உணவு பரிமாற்றம் மூலம் எந்தெந்த நாடுகளில் என்னென்ன உணவுகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டேன். தனக்கென்று ஓர் நடிப்பு. தனித்தன்மை, முத்திரை இவைகளைக் கொண்ட ரோஜா மலர் சச்சுவின்  திரைப் பயணம் அருமையாக இருந்தன. நாம் சாதாரணமாக ஒதுக்கித்தள்ளும் சணலுக்கு இத்தனை மகத்துவமா?
- பொன்னியம்மன் மேடு, வண்ணை கணேசன், சென்னை-600110.

நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் வைத்து வணங்க, எங்கெங்கு எப்படி வைக்கிறார்கள் என்பதை பொம்மை பொம்மை பார் பகுதி அறிவித்தது பாராட்டுக்குரியது. மதுரை விளையாட்டு இளவரசியாக பாண்டீஸ்வரி பற்றிய செய்திகள்  மாணவிகளுக்கு ஊக்கம் தரும் பாடம்.
- புலவர் தியாக சாந்தன், திருச்சி - 7.   

பாம்பு என்றாலே படையும் நடுங்கும்னு சொல்வார்கள். வித்யா பாட்டி சர்வ சாதாரணமாகச் பிடிக்கிறாரே, பலே பாட்டிதான். நட்சத்திர பலன்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
- ராஜி குருசாமி, சென்னை.