தோழி சாய்ஸ்கிராப்ட் பேன்ட்

இதோ ஆபீஸ் பெண்களின் ஹாட் சாய்ஸ், கிராப்ட் பேன்ட்டுகள். மேட்சிங்காக ஷர்ட், குர்தா, ஸ்லிட் டாப்கள் என எதற்கும் மேட்ச் செய்யலாம். பெரும்பாலும் வெள்ளை கருப்பு வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு வரும் இந்த கிராப்ட் பேன்ட்டுகள் ஆண்களின் உடைக்குரிய சாயலில் கெத்து லுக் கொடுக்கும்.

கொஞ்சம் ஃபிட், ஸ்லிம் பெண்களுக்கு இந்த கிராப்ட் டாப்கள் எந்தவித ரூல்களும் இல்லாமல் எப்படியும் அணியலாம். கொஞ்சம் பப்ளி பெண்கள் பின் பக்க இடைப்பகுதியை மறைத்து டாப்கள் அணிந்தால் சிறப்பாக இருக்கும். கணுக்காலுடன் முடிந்துவிடும் பாட்டம்வேர்கள் என்பதால் காலணிகளில் கூடுதல் கவனம் தேவை.

ஷாலினி நியூட்டன்