வார்த்தை ஜாலம்



இம்சை அரசன்  Loose Cannonகட்டவிழ்ந்த பீரங்கி, புயல் வரும்போது உருண்டு புரண்டு கப்பலின் சுவரில் முட்டி மோதி கப்பலையே ஓட்டை ஆக்கி மூழ்கடிச்சிருமாம்!
ஒரே வார்த்தையில் புரியற மாதிரி தமிழில் சொல்லணும்னா - ஓட்டைவாய்! சிலரை எப்பவும் கட்டுப்படுத்தவே முடியாது. திடீர் திடீர்னு எதையாவது உளறி கொட்டுவாங்க. மொத்தத்துல பேசிப் பேசியே காரியத்தை கெடுத்திருவாங்க. குறிப்பா அரசியல் அல்லது பத்திரிகை உலகில் இப்படிப்பட்டவர்களை குறிக்கும் சொல்தான் இந்த Loose Cannon.

Cannon என்பது பீரங்கின்னு தெரியும். அப்படிப்பட்ட அதிக எடையுள்ள அந்தக் காலத்து பீரங்கியை, போர் கப்பலில் கொண்டு செல்லும்போது, அதைச் சங்கிலியால் பிணைத்து கண்காணித்துக்கொண்டே இருக்கணுமாம். இல்லையேல் இந்த   Loose Cannon   (கட்டவிழ்ந்த பீரங்கி) புயல் வரும்போது உருண்டு புரண்டு கப்பலின் சுவரில் முட்டி மோதி கப்பலையே ஓட்டை ஆக்கி மூழ்கடிச்சிருமாம். இப்படித்தான் பல ஓட்டைவாய்கள் சமய சந்தர்ப்பம் தெரியாம, ‘உண்மைய சொல்றேன் உண்மைய சொல்றேன்’னு உளறி, தான் சார்ந்து இருக்கும் மனிதர்களையோ, கட்சியையோ தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி, நொந்து நூடுல்ஸாகி புலம்ப விட்ருவாங்க.

இந்த ஓட்டைவாய் மனிதர்களை எப்பவும் பீரங்கிய கண்காணிப்பிலேயே வெச்சிருக்கிற மாதிரி வெச்சிருக்கணும்... இல்லாட்டி முதலுக்கே மோசமா போயிரும்! அதனால்தான் இந்த Loose Cannon உவமையை இந்த இம்சை அரசர்களுக்கு காரணப் பெயராக வைத்து ஒரு மரபு சொற்றொடராகவே மாற்றிவிட்டனர். பொருத்தமா இருக்குல்ல... Loose Cannon     அவிழ்ந்த பீரங்கி ஓட்டைவாய்!

நல்ல மனசுக்காரன்!  Good Samaritan


நமக்கு ஒரு அவசர உதவி தேவைன்னா, சொந்தக்காரங்க வராங்களோ இல்லையோ, நன்கு பழகிய அடுத்த வீட்டுக்காரர்கள் கண்டிப்பா வருவாங்கதானே? அப்படி ரத்த உறவு இல்லாமல் ஓடி வந்து உதவி செய்யும் நல்ல மனசுக்காரர்களை ஆங்கிலத்தில் குறிக்கும் சொற்றொடர்தான் இது.அதிலும் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், முன்பின் தெரியாத எல்லோருக்கும் ஒருத்தர் உதவி செஞ்சா அவங்கதான்   Good Samaritan!Samaria என்பது பண்டைய காலத்தில் இருந்த ஒரு ஊராம்... அங்கு வசித்து வந்த அன்புள்ளம் கொண்ட மனிதர் ஒருவர், திருடர்களால் அடித்து துன்புறுத் தப்பட்டு தெருவில் விழுந்து கிடந்த ஒரு மனிதருக்கு வலிய சென்று உதவி செய்தாராம். ‘அண்டை வீட்டுக்காரரை உன்னை நேசிப்பது போல நேசி’ என்று இயேசு போதனை செய்த போது, ஒருவர் எழுந்து, ‘எப்படி அவ்வாறு இருக்க முடியும்’ என்று கேட்க இந்த   ஷிணீனீணீக்ஷீவீtணீஸீ   பற்றிய கதையை இயேசு அவருக்கு சொன்னாராம்.யதார்த்தம் இன்று வேறு மாதிரி இருந்தாலும்... நீங்க ஊருக்கு போகும் போது உங்க வீட்டுக்கு வரும் முக்கிய தபால்களை வாங்கி வைக்கும் அடுத்த வீட்டுக்காரர் கூட ஒரு வகையில் Good Samaritan தானே!

(வார்த்தை வசப்படும்!)