இந்தியாவில் டெஸ்லா கார்!



*உலகிலேயே எலெக்ட் ரிக் கார்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ள நாடு,  நார்வே. இங்கே 2018-ல் வாங்கப்பட்ட புதிய கார்களில், சுமார் 50 சதவிகிதம் எலெக்ட்ரிக் கார்கள்தான்.  அங்கே வசிக்கும் மக்கள் பயணத்துக்கு அதிகமாக எலெக்ட்ரிக் கார்களைத் தான் பயன்படுத்துகிறார்கள்.    

*உலகில் கார் நிறுவனங் கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால், அவற்றில் பல இன்னமும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் இறங்கவில்லை. பேட்டரி விலை மற்றும் காரின் விலை நிர்ணயம்தான் இதற்கு முக்கிய காரணம்.

*கார்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று எலெக்ட்ரிக்கில் மட்டுமே ஓடக்கூடியது. இன்னொன்று எலெக்ட்ரிக்குடன், பெட்ரோல்-டீசலில் ஓடக்கூடியது.

*பிரபல கார் நிறுவனமான ‘டெஸ்லா’ இந்த வருடம் இந்தியாவில் தன் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

*டெஸ்லா எலெக்ட்ரிக் பேட்டரிகள் மிகவும் பிரபல மானவை. அவை 3-5 லட்சம் மைல் பயணம் வரை உழைக்கும் திறன் கொண்டது. ‘‘ஒரு மில்லியன் மைல் வரை பயணிக்கும் திற னைக் கொண்ட பேட்டரியை உருவாக்க வேண்டும். அதனை அறிமுகப்படுத்தும்போது எலெக்ட்ரிக் கார் உற்பத்தியும் வாங்குதலும் அதிகரிக்கும்...’’ என்கிறார் டெஸ்லாவின் நிறுவனர் எலன் மஸ்க். எலெக்ட்ரிக் கார்களில் அதிக கவனம் செலுத்தி வருபவர் எலன் மஸ்க்.

*பொதுவாக  எலெக்ட்ரிக் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 70 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். இது சில கார்களில் 100 கிலோ மீட்டர் என்றளவில் மட்டுமே உள்ளது. ஆக, எலெக்ட்ரிக் கார்கள் பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர இடையூறாக இருப்பது சார்ஜிங்தான். அதனால் சார்ஜிங் ஸ்டேஷன்களைக் குறிப்பிட்ட கிலோ மீட்டருக்குள் அமைக்க வேண்டும். இதனால் மத்திய அரசு கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.

*62 நகரங்களில் 2636 சர்வீஸ் ஸ்டேஷன்களை அமைக்க அனுமதி.

*ஒரு எலெக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன் வைப்பது எளிதல்ல. குறைந்தது 25 லட்ச ரூபாய் வரை செலவாகும். இதில் 500-ஐ டாட்டா பவர் நிறுவனமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 1000 நிலையங்களையும்  அமைத்து நடத்தப்போகின்றன.

*வருங்காலத்தில் இந்த சார்ஜ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை 14,000-ஐத் தாண்டச் செய்யும் திட்ட மும் மத்திய அரசிடம் உள்ளது.

*வெளிநாடுகளில் எலெக்ட்ரிக் கார் விலை இப்போதுதான் சரிய  ஆரம்பித்துள்ளது.  இதனிடையே ‘டெஸ்லா’ மாடல் 3 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை 38,900 டாலர். அதாவது சுமார் 29 லட்ச ரூபாய்.
 
இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் கார்களின் விலைப் பட்டியல்

மஹிந்திரா eKUV100 - ரூ. 8.5 லட்சம்
மஹிந்திரா XUV300 EV -  ரூ. 10-13 லட்சம்
MG ZS EV - ரூ. 20.88 லட்சம்.
ஜாக்குவர் பேஸ் - ரூ.1 கோடி
பி.எம்.டபுள்யூ i 3 - ரூ.1 கோடி
டாட்டா மோட்டார்ஸ் Altroz EV - ரூ. 14 லட்சம்
டாட்டா மோட்டார்ஸ் நெக்சான் EV - ரூ. 14 லட்சம்

ராஜிராதா