உப்பு பிரமிடுகள்கரீபியன் கடலில் உள்ள ஒரு குட்டித்தீவு பொனேயர். சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் இங்கே வந்து போகின்றனர். ஸ்கூபா டைவிங் மக்களைக் கவர்ந்தாலும் இங்கே வந்து இறங்கியவுடன் கடலும் காற்றும்தான் முதலில் வசீகரிக்கின்றன.
அடுத்த முக்கியமாக தீவின் தென் கிழக்குப்பகுதியில் வரிசையாக வீற்றிருக்கும் உப்பு பிரமிடுகள் ஆச்சர்யமூட்டுகின்றன. ஒவ்வொரு பிரமிடும் 50 அடி உயரமுடையது. 99.6 சதவீதம் தூய்மையான உப்பால் ஆன அந்த பிரமிடு 10 ஆயிரம் மெட்ரிக் டன் எடை கொண்டது.