வகுப்பறை



ஆப்கானிஸ்தானில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் தீவிரவாதிகளால் சூறையாடப் பட்டுவிட்டன. அதனால் வெட்ட வெளியில் கல்வி கற்க வேண்டிய அவலம். காபூலைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார் ஓர் ஆசிரியை. வெயிலைப் பொருட்படுத்தாமல் ஆவலுடன் பாடத்தைக் கேட்கின்றனர் குழந்தைகள்.