மலிவு விலையில் ஸ்மார்ட்போன்



ஒரு காலத்தில் போன் என்றாலே ‘நோக்கியா’ தான். அந்தளவுக்கு மக்களின் மனதில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்த பிராண்ட் இது. ‘சாம்சங்’, ‘சோனி’, ‘ஹுவாய்’, ‘ஆப்பிள்’ என பெரு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியதால், அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் ‘நோக்கியா’ திணறியது.
‘‘காலத்துக்கு தகுந்த  மாதிரி தொழில்நுட்பத்தில் அப்டேட் ஆகவில்லை...’’ என்று நோக்கியா மீது பரவலாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டை வைத்தனர். இருந்தாலும் மீண்டு வந்த நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கி கபளீகரம் ஆடிக் கொண்டிருக்கிறது.

ஆம்; மலிவான விலையில் ‘நோக்கியா 2.2’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் இறக்கி லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைத் தன்வசம் ஈர்த் திருக்கிறது.

5.71 இன்ச்சில் கைக்கு அடக்கமான டிஸ்பிளே, 5 எம்பியில் செல்ஃபி கேமரா, துல்லியமான வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளுக்கு 13 எம்பியில் பின்புற கேமரா, முதல் முறையாக ‘MediaTek Helio A22’ பிராசஸர், ஆண்ட்ராய்டு இயங்குதளம், 16 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் எஸ்டி கார்டு மூலம் 400 ஜிபி வரைக்கும் ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளும் வசதி,  2 ஜிபி ரேம், ஒரு நாள் முழுக்க பேட்டரியை நிற்க வைக்கும் 3000mAh திறன் என அசத்துகிறது இந்த போன். ஐபோனில்  இருக்கும் ஃபேஸ் அனலாக்  வசதியும்  இதில்  உள்ளது.

ஃப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா ஆன்லைன் இணையதளங்களில் இந்த போன் விற்பனைக்குக் கிடைக்கிறது. விரைவில் மொபைல் கடைகளிலும் கிடைக்கும். விலை ரூ.7,699-லிருந்து ஆரம்பிக்கிறது.