பழங்குடிகளின் எழுச்சி!



மகாராஷ்டிரா  

பழங்குடிகளின் எண்ணிக்கை 9 சதவிகிதம்.  சர்வஹாரா ஜன் அந்தோலன் இயக்கம், கிராம சபைகளை கட்டுப்படுத்தி வளர்ச்சிப்பணிக்கான மத்திய அரசின் நில கையகப்படுத்தலை தடுக்கிறது.  

மேற்குவங்கம்  

பழங்குடிகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம். இங்கு ஆதிக்கம் செலுத்துவது பாரத் ஜகத் மஜ்ஹி பர்கானா மஹால் எனும்  அரசியல் இயக்கம். திரிணாமூல் காங்கிரஸை அதிதீவிரமாக எதிர்க்கும் இவ்வமைப்பு 60 சந்தாலி மொழிப்  பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறது.  

சத்தீஸ்கர்  

இந்தியாவிலேயே உச்சமாக 31% பழங்குடிகள் வாழும் மாநிலம் இது. பதல்கடி பழங்குடிகள் சூரஜ்பூர் மற்றும் ஜஸ்பூரில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அண்மையில் ஜஸ்பூர் அரசு அதிகாரிகளையே கலியா கிராமத்தில் நுழையாமல் தடுத்தது இந்த அமைப்பினரின் துணிச்சலுக்கு சாட்சி.  

ஜார்க்கண்ட்  

26 சதவிகித பழங்குடிகள் வாழும் இங்கு பதல்கடி ஆதிக்கம் அதிகம். 3 மாவட்டங் களில் 100 கிராமங்களில் அரசின் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக புரட்சிக் குரல்கள் எழுந்துள்ளன.   

மத்தியப்பிரதேசம்  

ஜெய் ஆதிவாசி யுவசக்தி என்ற அரசியல் இயக்கம் தீவிர இயக்கத்திலுள்ளது. இங்குள்ள பழங்குடி மக்களின் எண்ணிக்கை 21%.