ட்ரெக்கிங் சவால்!



Stok Kangri  

20 ஆயிரம் அடி உயரத்திலுள்ள ஸ்டோக் பகுதி, இமாலயத்தின் தூய அழகை 20 டிகிரி செல் சியஸ் வெப்பநிலையில் தரிசிக்க உதவும். ஒன்பது நாட்கள் பயணம் செய்ய முயலும் இப் பகுதியில் ஸன்ஸ்கார் மற்றும் சிந்துநதிப்பகுதி உங்கள் ஆன்மாவை விழித்தெழச் செய்யும். கட்டணம் 18 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது.  

Pin Parvathy  

இமாலயத்தின் பழமையான மலையேற்ற வழி இது. 17 ஆயிரத்து 450 அடி உயரத்தில் ஜிலுஜிலுவென 20 டிகிரியில் சாகச அனுபவத்தை அனுபவிக்கலாம். கட்டணம் 24 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது.  

Bara Bangal   

குலு, காங்ரா பள்ளத்தாக்கு பகுதிகளை இணைக்கும் மலையேற்றம் இது. 26 ஆயிரத்து 775 ரூபாயை கந்துவட்டி வாங்கியாவது தேற்றினால் பதினாறாயிரத்து 70 அடியில் ஜூன்-அக். மாதத்தில் ஜாலி செய்யலாம்.  புதிதாக மலையேற்றம் செல்பவர்கள் Beasehund, Parashar lake, Chopta tunganath ஆகிய பகுதிகளை விசிட் செய்யலாம். தலைவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி பிரச்னைகளுக்கான மருந்துகளை முன்கூட்டியே  எடுத்துச்செல்வது நல்லது.