நம்பினால் நம்புங்கள்




*நீங்கள் இன்று சாப்பிடும் ஆப்பிள், 6 மாதங்களுக்கு முன் பறிக்கப்பட்டது!

*ஒரு மனிதன் சுறாவால் கொல்லப்படுவதை விட, பசுவினால் கொல்லப்படுவதற்கு 22 மடங்கு சாத்தியங்கள் அதிகம்.

*ஒவ்வொரு நிமிடமும் கூகுளில் 20 லட்சம் தேடல்கள் நிகழ்கின்றன.

*மனிதர்கள் காதல் வயப்படும்போது மூளையில் சுரக்கும் அதே வேதிப்   பொருள், நாய்களுக்கும் சுரக்கிறது - அவற்றின் எஜமானர்களைக் காணும்போது!

*பறவையின் டி.என்.ஏ.வைப் பயன்படுத்தி, டைனோசர்களை மீண்டும் பிறக்கச் செய்வது, அறிவியல் ரீதியாகச் சாத்தியம்!

*கார்ன்ஃப்ளேக்ஸில் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை செயற்கையாகவே சேர்க்கப்படுகின்றன.

*பூசணம் பூத்த ரொட்டிகளில் காணப்படும் பூஞ்சைகளில், உயிர் பறிக்கும் வகையும் உண்டு!

*‘தூங்கும் முன்பும், விழித்த உடனேயும் அரை கிளாஸ் தண்ணீர் குடிப்பவர்களால் தாங்கள் கண்ட கனவுகளில் பலவற்றை நினைவு கூற முடியும்’ என்பது ஒரு மனோதத்துவ ஆய்வு முடிவு!

*குழந்தை கருவில் இருக்கும்போது அதன் தாய் உண்ணும் உணவின் அடிப்படையிலேயே, குழந்தையின் ருசி உணர்வு அமைகிறது.