பாரம்பரியக் குகை!



இஸ்ரேல் நாட்டின் மரேஷா மற்றும் பெய்ட் கவ்ரின் ஆகிய பண்டைக்கால நகரங்களில் இருக்கும் குகைகளில் ஒன்று இது. கற்காலம் முதல் சிலுவைப் போர்க்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்த இந்த நகரங்களில், பூமிக்கு அடியில் நல்ல காற்றோட்டத்தோடு உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குகைகள் உள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இவை, அந்தக் கால மனிதர்கள் பூமிக்கு அடியில் கட்டிடங்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதையும் உணர்த்துகின்றன. சமீபத்தில் இவை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன.