கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு வேலை வேண்டுமா?



உத்வேகத் தொடர்

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (Staff Selection Commission) எனப்படும் எஸ்.எஸ்.சி (SSC) மத்திய அரசின் பல்வேறு துறைகளில்  உள்ள காலி பணியிடங்களுக்கு  நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளையும் பாடத்திட்டங்களையும் இந்தப் பகுதியில் பார்த்துவருகிறோம். அந்த  வகையில் இனி கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வோம்.

பணிகள்


* கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) இன் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (Constable (General Duty) in Border Security Force  (BSF)
* சென்ட்ரல் போலீஸ் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (Central Industrial Security Force [CISF])
* சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் (Central Reserve Police Force [CRPF]
* இந்தோ-திபெத் பார்டர் போலீஸ் (Indo Tibetian Border Police [ITBP])
* சஷாஸ்த்ர சீமா பால் (Sashastra Seema Bal [SSB])
* நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (National Investigation Agency (NIA)
* செகரட்டரியேட் செக்யூரிட்டி ஃபோர்ஸ் அண்ட் ரைஃபில் மேன் (ஜெனரல் டியூட்டி) Secretariat Security Force (SSF) and  Rifleman (General Duty))

வயது விவரம்

‘கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)’ பணிகள் தேர்வில் கலந்துகொள்ள குறைந்தபட்ச வயது 18 வயது ஆகும். அதிகபட்சமாக 23 வயதுள்ளவர்கள்  இந்தத் தேர்வை எழுதலாம். வயது வரம்பு ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப மாறுபடும். இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச்  சேர்ந்தவர்களுக்கு (SC/ST) அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. இதேபோல், பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு  (OBC) அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி


பொதுவாக மெட்ரிகுலேஷன் அல்லது 10-ஆம் வகுப்புத் தேர்வில் (Matriculation or 10th Class) தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வை  எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

தேர்வுக் கட்டணம்


‘கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)’ பணிகள் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூபாய் 100. இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அனுப்ப  வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் ஆகியோர் இந்தத் தேர்வுக் கட்டணம்  செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு மையம்


இந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில்  நடத்தப்படுகிறது. மேலும் தென் மண்டல அலுவலகத்தோடு தொடர்புடைய குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா,  புதுச்சேரி, ஐதராபாத், நிசாமாபாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களை,

The Regional Director (SR),
Staff Selection Commission,
IInd Floor, EVK Sampath Building,
DPI Campus, College Road,
Chennai - 600 006
Tamilnadu - என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.sscsr.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

தேர்வு முறை

* கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination)
* உடல் தகுதித் தேர்வு (Physical Efficiency Test) (PET)
* உடல் தகுதித் தேர்வு (Physical Standard Test) (PST)
* மருத்துவத் தேர்வு (Medical Examination)

பாடத்திட்டம்


தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கு சரியான முறையில் விடையளிக்க முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தைப் பற்றி தெளிவாகத்  தெரிந்துகொள்வது நல்லது.(a) பொது அறிவு மற்றும் புத்திக்கூர்மை (General Intelligence & Reasoning): Analytical  aptitude and ability to observe and distinguish patterns will be tested through questions  principally of non-verbal type. This component may include questions on Analogies, Similarities  and Differences, Space Visualization, Spatial Orientation, Problem Solving, Analysis, Judgement,  Decision Making, Visual Memory, Discrimination, Observation, Relationship Concepts, Arithmetical  Reasoning and Figural Classification, Arithmetic Number Series, Non-verbal series, Coding and  Decoding etc.

(b) பொது விழிப்புணர்வு (General Awareness): Questions in this component will be aimed at testing the  candidate’s general awareness of the environment around him and its application to society.  Questions will also be designed to test knowledge of current events and of such matters of every  day observations and experience in their scientific aspect as may be expected of any educated  person. The test will also include questions relating to India and its neighbouring countries  especially pertaining History, Culture, Geography, Economic Scene, General Policy and Scientific  Research.

(c) கணிதத்திறன் (Quantitative Aptitude): This paper will include questions on problems relating to  Number Systems, Computation of Whole Numbers, Decimal and Fractions and relationship between  Numbers, Fundamental Arithmetical Operations, Percentages, Ratio and Proportion, Averages,  Interest, Profit and Loss, Discount, Mensuration, Time and Distance, Ratio and Time, Time and  Work, ect.

(d) ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் திறன் (English Comprehension): Candidates ability to understand correct  English, his basic comprehension and writing ability, ect. would be tested. The questions in all  the above components will be of Matriculation level.மேலும் விவரங்களுக்கு: ‘கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)  (Constable (General Duty)) தேர்வுக்கான கல்வித் தகுதி, பாடத்திட்டங்கள் பற்றிய அதிகமான விவரங்களை  www.ssconline.nic.in மற்றும் www.ssc.nic.in என்ற இணையதள முகவரிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

- தொடரும்.
- நெல்லை கவிநேசன்