வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

எஞ்சினியர்களுக்கு எல்லைக் காவல்படையில் வேலை!

நிறுவனம்: பி.எஸ்.எஃப் எனப்படும் இந்திய ராணுவத்தின் ஒரு படைப் பிரிவான எல்லைக் காவல்படை.
வேலை: 2 பிரிவுகளில் இந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக சப்-இன்ஸ்பெக்டர்(ஒர்க்ஸ்) வேலை. இரண்டாவது ஜூனியர்  எஞ்சினியர் பதவியிலான எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 139. இதில் முதல் பிரிவில் 103 இடங்களும் இரண்டாவது பிரிவில் 36 இடங்களும் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: சப்-இன்ஸ்பெக்டர்(ஒர்க்ஸ்) வேலைக்கு சிவில் எஞ்சினியரிங் படிப்பில் 3 வருட டிப்ளமோ. இரண்டாவது வேலைக்கு எலக்ட்ரிக்கல்  எஞ்சினியரிங் படிப்பில் 3 வருட டிப்ளமோ
வயது வரம்பு: இரண்டு வேலைக்குமே 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: இரண்டு வேலைகளுக்குமே எழுத்து, உடல் திறன், மருத்துவ சோதனை மற்றும் நேர்முகத் தேர்வுகள் உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.10.18
மேலதிக தகவல்களுக்கு www.bsf.nic.in

பங்கு வர்த்தகத் துறையில் வேலை

நிறுவனம்: செபி எனப்படும் செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா. இது தேசிய பங்கு வர்த்தக பாதுகாப்புக்கான மத்திய அரசு  நிறுவனம்.
வேலை: பொதுப் பிரிவு, சட்டம், இன்ஃபர்மேஷன், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகள் என 5 பிரிவுகளில் வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 120. இதில் பொதுப் பிரிவில் மட்டுமே 84 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை, சட்டப் படிப்பில் இளநிலை, சி.ஏ, சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங், எம்.சி.ஏ,  இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளில் தேர்ச்சியுற்றவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 30க்குள்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.9.18
மேலதிக தகவல்களுக்கு www.sebi.gov.in

துணை ராணுவப் படையில் கான்ஸ்டபிள் பணி!


நிறுவனம்: ஐ.டி.பீ.பி.எஃப் எனப்படும் துணை ராணுவப் படையின் ஒரு பிரிவான இந்தோ திபேத்திய எல்லைப் படை
வேலை: கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் டெலிகாம் துறையில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 390. இதில் முதல் பதவியில் 218 (ஆண் 132, பெண் 33), இரண்டாவது பதவியில் 155(ஆண் 132, பெண் 23) மற்றும் மூன்றாம்  பதவியில் 17 (ஆண் 14, பெண் 3) இடங்கள் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். மற்றும் டிப்ளமோ படிப்பு
தேர்வு முறை: உடற் தகுதி, தொழில் திறன், மருத்துவ சோதனை மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.10.18
மேலதிக தகவல்களுக்கு www.itbpolice.nic.in

ஒலிபரப்பு ஆலோசனைத் துறையில் வேலை!


நிறுவனம்: பி.இ.சி.ஐ.எல் எனப்படும் பிராட்காஸ்டிங் கன்சல்டன்ட்ஸ் இண்டியா லிமிடெட். இது மத்திய அரசின் ஒலிபரப்புத் துறை தொடர்பான  ஆலோசனை நிறுவனம்
வேலை: 4 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 105. இதில் பேஷன்ட் கேர் மேனேஜர் 20, பேஷன்ட் கேர் கோ-ஆர்டினேட்டர் 70, டிரைவர் 5 மற்றும் ஆம்புலன்ஸ்  பாராமெடிக்ஸ் 10 இடங்கள் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு லைஃப் சயின்ஸ் படிப்பில் டிகிரியுடன் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் முதுகலை. இரண்டாவது  வேலைக்கு லைஃப் சயின்ஸ் படிப்பில் டிகிரி. மூன்றாம் நான்காம் வேலைகளுக்கு 10வது படிப்பு போதுமானது
வயது வரம்பு: முதல் வேலைக்கு 40-க்குள்ளும், இரண்டாவது வேலைக்கு 35-க்குள்ளும், மூன்றாவது வேலைக்கு 60-க்குள்ளும் இருத்தல் அவசியம்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.9.18
மேலதிக தகவல்களுக்கு www.becil.com

மைனிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசுத் துறையான
வெஸ்டர்ன் கோல்ஃபீல்டு எனும் நிலக்கரி சுரங்கத் துறை
வேலை: மைனிங் சர்தார் மற்றும் இன்னும் சில துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 333. இதில் பொதுப் பிரிவு 157, ஓ.பி.சி. 101, எஸ்.சி. 50 மற்றும் எஸ்.டி. 25 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: மைனிங் வேலைக்கு அந்தத் துறையில் டிப்ளமோ படிப்பு.
வயது வரம்பு: 18 - 30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.9.18
மேலதிக தகவல்களுக்கு www.westerncoal.nic.in

-தொகுப்பு: டி.ரஞ்சித்