ஜோக்ஸ்
என்னது... இந்தப் பட்டாசு எல்லை தாண்டிப் போய் வெடிக்குமா?’’ ‘‘ஆமாம். இது சீன பட்டாசாச்சே..! - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
என் மாப்பிள்ளை ஆனாலும் ரொம்ப மோசம்...’’ ‘‘ஏன்... என்ன செய்தார்?’’ ‘‘அறுபதாம் கல்யாணம் ஆனதுக்குப் போய் தலை தீபாவளி கொண்டாடணும்னு சொல்றாரு!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
என்னப்பா இது... இந்த வெடி படுக்க வச்சாதான் வெடிக்குது!’’ ‘‘இது மந்திரி வெடி. பிறகு எப்படி வெடிக்கும்?’’ - தீ.அசோகன், சென்னை-19.
யாரோ விட்ட ராக்கெட் டாஸ்மாக்ல புகுந்துடுச்சு...’’ ‘‘அப்புறம்..?’’ ‘‘கட்டிங் ஊற்றி அணைச்சுட்டாங்க..! - அ.ரியாஸ், சேலம்.
‘தீபாவளி படங்களிலே உங்க படம் ஒண்ணுதான் பார்க்கற மாதிரி இருக்குது!’’ ‘‘அப்படியா..?’’ ‘‘ஆமா! மத்த எல்லா படம் ஓடற தியேட்டர்களும் ஒரே கூட்டமா இருக்கு!’’ - தீ.அசோகன், சென்னை-19.
‘என்ன மாமா இது... ஒரு வெடிகூட சரியா வெடிக்கலை!’’ ‘‘அந்த பாழாப்போன ஹெட்போனை காதுலேர்ந்து கழட்டுங்க மாப்ளே!’’ - அ.ரியாஸ், சேலம்.
‘சிரப் பாட்டிலை ஏன் ஒரே நாள்ல குடிச்சு காலி பண்ணீங்க..?’’ ‘‘ராக்கெட் விட வேற பாட்டிலே கிடைக்கல டாக்டர்!’’ - அ.ரியாஸ், சேலம்.
|