ஜோக்ஸ்



‘‘இந்த வெடிக்கு ஏன் பிரைம் மினிஸ்டர் வெடின்னு பேரு வெச்சிருக்காங்க?’’
‘‘கொளுத்தினதும் வெளிநாட்டுக்குப் பறந்து போயிடும்!’’

‘‘தலைவருடைய முதுகுல
தீக்காயங்கள் எப்படி ஏற்பட்டுச்சு?’’
‘‘ஆட்டம் பாமை கொளுத்திட்டு குளோஸா போய் செல்ஃபி எடுக்க ட்ரை பண்ணாராம்!’’

‘‘ேபான வருஷத்தை விட
இந்த வருஷம் ரயில்
பட்டாசு விலை மூணு
மடங்கு கூடுதலா
இருக்கே?’’
‘‘இது மெட்ரோ ரயில்
பட்டாசு சார்!’’

‘‘நீங்க வெச்ச சரவெடில இருந்து நாலஞ்சு பட்டாசு என் வீட்டுக்
குள்ளே வந்து வெடிச்சிடுச்சு!’’
‘‘சாரி... சாரி... பட்டாசுகளோட வெளிநடப்புக்கு நான்
பொறுப்பில்லை!’’

‘‘தலைவரை அதிரசம் செய்யச் சொன்னது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘பாகை ஜெயில் கம்பி பதத்துல எடுத்து, அதிரசத்தை கல்லு மாதிரி பண்ணிட்டார்!’’

‘‘நான் செஞ்ச மைசூர்பாகு சாப்பிட்டுட்டு
நீங்க எதுவுமே சொல்லலியே?’’
‘‘இன்னும் ரெண்டு சாப்பிட்டா மைசூர்பாகுபலி
ஆயிடுவேன்!’’

‘‘ஏன் அந்த கிரானைட் குவாரி ஓனர் கடுப்பா போறார்?’’
‘‘பட்டாசை நாங்க ‘சகாயமா’
தர்றோம்னேன்...’’

- வீ.விஷ்ணுகுமார்