ஜோக்ஸ்



‘தலைவர் ‘முதல் நாள்... முதல் பட்டாசு’ங்கறாரே... அப்படீன்னா?’’
‘‘தீபாவளி அன்னைக்கு முதல் பட்டாசை, மகளிரணித் தலைவியோடு சேர்ந்துதான் வெடிப்பாராம்!’’

‘‘தீபாவளிக்கு வெடிக்கலாம்னு Flipkartல பட்டாசு வாங்கி வச்சதும் எங்க அப்பா
டென்ஷன் ஆகிட்டார்...’’‘‘அப்புறம்..?’’
‘‘காசை கரியாக்காதேன்னு சொல்லி, அதை எல்லாம் OLXல வித்துட்டார்டா!’’

‘‘பட்டாசு வெடிக்கும்போது, மனைவி உன்னை பூரிக்கட்டையால அடிச்சாங்களா... ஏன்?’’
‘‘மச்சினியோட சேர்ந்து மத்தாப்பு கொளுத்தறதை செல்ஃபி எடுத்தேன்... அதான்!’’

‘‘என் பேச்சை கேட்க வந்தவங்க ஒண்ணா கூடி என்னய்யா பேசிக்கிட்டிருக்காங்க..?’’
‘‘உங்க மேல செருப்புக்கு பதிலா பட்டாசை வீசலாமா, பலகாரத்தை வீசலாமான்னுதான் தலைவரே!’’

‘‘இப்படிக் கூடவா பட்டிமன்றம் நடத்துவாங்க..?’’‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘தலைவர் அதிக முறை தீபாவளி கொண்டாடியது ‘புழல்’லயா, ‘திகார்’லயானு பட்டிமன்றம் நடத்தப் போறாங்க!’’

‘‘தலைவர் மப்புல உளற ஆரம்பிச்சிட்டாரா...?’’‘‘என்னன்னு?’’
‘‘சிவகாசியில் சைலன்ட் மோட்ல வெடிக்கிற பட்டாசுகளைத் தயாரிக்க வச்சு, தமிழ்நாட்டை அைமதிப்
பூங்காவா ஆக்கப் போறாராம்!’’

‘‘தகவல் அறியும் உரிமை சட்டத்துல இதையெல்லாம் போய் கேப்பாங்களா..?’’
‘‘என்ன கேட்டார் அவர்?’’
‘‘தீபாவளிக்கு புடவை எடுக்கப் போன அவர் மனைவி எந்த ஜவுளிக்கடையில இருக்காங்கன்னுதான்...’’

பர்வீன் யூனுஸ்
ஓவியங்கள்: அரஸ்