‘‘உங்களுக்கு எதிரிகளே இல்லை மன்னா...’’
‘‘நீர் இருக்கும் வரை அப்படிச் சொல்ல முடியாது புலவரே..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
தத்துவம் மச்சி தத்துவம்
மதகுருவுக்கு வணக்கம் சொல்லலாம். வியர்க்குருவுக்கு வணக்கம் சொல்ல முடியுமா?
-வழிநெடுக வணக்கம் சொல்லியே காலத்தை ஓட்டுவோர் சங்கம்
- இரா.வசந்தராசன், கல்லாவி.
மாட்டுக்கு லோன் வாங்கினாலும் வீட்டுக்கு லோன் வாங்கினாலும் மனுஷன்தான் கையெழுத்துப் போடணும். மாடோ, வீடோ கையெழுத்து போடாது!
- லோன் வாங்க லோலோவென்று அலைவோர் சங்கம்
- கு.அருணாசலம், தென்காசி.
பெயர், அட்ரஸ் எல்லாம் சரியாச் சொல்லியும் இவரை ஏன் ‘இந்த வீடு இல்லே’ன்னு திருப்பி அனுப்பறீங்க?’’
‘‘பின்கோடு தப்பா சொல்றாரே..!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.
‘‘இந்த டைரக்டர் ஏற்கனவே ஜோசியரா இருந்தவராம்!’’
‘‘அதான் படப்
பிடிப்பை பன்னிரெண்டு கட்டங்களா நடத்தணும்ங்கிறாரா..?’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
தலைவருக்கு ஜெயில் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும் போல...’’
‘‘அதுக்காக அங்கே இருந்து பார்சல் சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘அந்த பேஷன்ட் எதுக்கு தகராறு பண்றாரு..?’’
‘‘நர்ஸையும் சேர்த்து டிஸ்சார்ஜ் பண்ணி அவரோடு அனுப்பி வைக்கணுமாம்..!’’
- பி.ஜி.பி.இசக்கி, அகஸ்தியர்பட்டி.