facebook வலைப்பேச்சு



இந்தியாவில் இருக்கும் காசை அடானிக்கு குடுத்து ஆஸ்திரேலியாவில் தொழில் செய்யச் சொல்லும் புலிகேசி பிரதமர், இந்தியாவில் கக்கூஸ் கட்ட ஆஸ்திரேலியாவில் பணம் கேட்கிகிறார்...
- சஞ்சய் காந்தி

நேற்றிரவு நான்
வீட்டிற்கு வராததால்
தவித்திருக்கக்கூடும்
கொசுக்கள்!
# நேற்றைய பங்கையும்
சேர்த்து உறிஞ்சுதுடா சாமி
- அரவிந்த் அமிர்தராஜ்

குஞ்சு பறவையின் சத்தம் எட்டும்
தொலைவுக்கப்பால் இரை தேடிப் போவ
தில்லை தாய்க் குருவி!
- மன்னை
முத்துக்குமார்

கூடு தொலைத்த
பறவைக்கு
காடு கொடுக்கிறது
கணக்கற்ற
கூட்டை....
-ரேவா பக்கங்கள்

செல்ஃபீயை எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடியிருந்தே லைவ் வீடியோவா பார்த்துட்டுதான் வர்றோம்... முகம் பார்க்குற
கண்ணாடீல!
மோகனா சுந்தரம் மீனாட்சி சுந்தரம்

கரும்புகை பரப்பியபடி
கடந்து போனது
ஒரு வாகனம்...
படபடக்கும் சிறகுகளால்
மெல்லக் கலைத்து
தன் வண்ணம் மாறாமல்
பறக்கிறது
வண்ணத்துப்பூச்சி
யாழி கிரிதரன்

உன் கௌரவம் உன் நாக்கு நுனியில் இருக்கிறது.
- வேம்பாத்து ராஜன் பாபு

தர்மபுரி அரசு மருத்துவமனையில் இறந்த 13 குழந்தைகளும் குறைப் பிரசவக் குழந்தைகள்: ஓ.பன்னீர்செல்வம்
# நல்லவேளை... அம்மையாரின் விடுதலைக்காக தற்கொலை செய்து கொண்ட குழந்தைகள்னு சொல்லாம விட்டீங்களே!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

எந்தக் கதவில்   Push Pull   எழுத்துக்களைப் பார்த்தாலும் பதற்றம் வந்துவிடுகிறது. இன்னும் ஒரு விநாடியில் நான் என்ன செய்ய வேண்டும். இழுக்க வேண்டுமா? தள்ள வேண்டுமா? முடிவெடுக்க சிந்திக்கையில் கதவு என் முகத்தருகே வந்து ‘ஹலோ’ என்கிறது.
- வீபா வீ

இங்கன ஒருத்தன்
ஓரமா தனியா நின்னு ப்ளையிங் கிஸ் விட்டுட்ருக்கான்... ‘என்னாடா’ன்னு கேட்டா சென்னையில முத்தப் போராட்டமாம்.
- போட்டோக் கார்

நாளை முதல் தீவிரமாக காதல் கவிதை எழுதப்போவதால் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு கேட்டுக் கொள்வதோடு, அதைப் படித்து யாரும் ப்ரபோஸ் செய்ய வேண்டாம் என்றும் வேண்டிக்கொள்கிறேன்...
- சித்தன் கோவை

கனவில் வந்த பட்டாம்பூச்சிக்கு வண்ணங்களைப் பொருத்திப் பார்க்கிறேன். அதன் உற்சாகத்திற்கு பொருந்தியதாக எதுவுமே அமையவில்லை.
- சுந்தரி விஸ்வநாதன்

twitter

@VenkysTwitts   
அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேருதான் ஜெனரேஷன் கேப்!

@RajanLeaks
வெயிட் பண்ணிப் பாத்தேன்... எதுவும் கடந்து போகாதுன்னு புரியுது... நாமதான் எந்திரிச்சு போவணும் போல!

@Aathithamilan   
தமிழர்களால் புரட்டாசியில் திருப்பதிக்கு வருமானம்; கார்த்திகையில் சபரிமலைக்கு வருமானம். மீதி 10 மாதமும் தமிழ்நாட்டு டாஸ்மாக்கிற்கு வருமானம்!

@thameem06 
மக்குக் கொடுக்கப் போகும் தண்டனையை நம்மிடமே கேட்கிறது குடும்பம் என்னும் நீதியற்ற மன்றம்!
# ‘‘தம்பி! காலைல டிபனுக்கு உப்புமா பண்ணவா? கிச்சடி பண்ணவா?’’

@paidkiller   
கொசுவிடம் கேட்க என்னிடம் ஒரேயொரு கேள்விதான் உண்டு... ‘‘எதற்கிந்த மானங்கெட்ட பிழைப்பு?’’

 @Butter_cutter   
இனி ‘ஆதார்’ இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது.
# ஆதார் வாங்கி  பாஸ்போர்ட் வாங்கறதுக்கு, டைரக்டா ஆதாரையே பாஸ்போர்ட்டா மாத்திட்டா?

 @naiyandi 
 பஸ்ஸுக்குக் காத்திருக்கும் பொறுமை, மருத்துவமனையில் காத்திருக்கும் பொறுமை இருப்பவர்கள் எந்த மேனேஜரை யும் சமாளித்து விடுவார்கள்!

@RazKoLu 
  டெல்லி தேர்தலில் தேமுதிக பங்கேற்காது: விஜயகாந்த்
# பாகிஸ்தான் தீவிரவாதிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து உற்சாகம்.

@ashoker_UHKH   
தண்ணில கண்டம்... தண்ணில கண்டம்...ங்கிறாங்களே! அப்படின்னா ஆஸ்திரேலியாதான?!

@ThePayon   
‘வாழ்க்கை வாழ்வதற்கே!’
அதை வைத்துக்கொண்டு வேறென்ன
செய்வார்களாம்?

@gokula15sai 
‘‘தியேட்டர் டிக்கெட்ல என்ன விலை போட்டிருக்கோ, அந்த காசுக்கு மேல ஒரு பைசாகூட கூடுதலா கொடுத்து டிக்கெட் வாங்காதீங்க’’ன்னு சொல்லிட்டு அரசியலுக்கு வரட்டும்!

@manipmp 
110 ரூபாய் பீர் குடிக்கும்போது வராத மன உளைச்சல், ஆறாவது முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க 20 ரூபாய் போகுமென்று உணரும்போது வருகிறது!

@cbdaas   
கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றிய பிறகு ஒரு நிம்மதி வரும் பாருங்க, அதற்கு அமைதிக்கான நோபல் பரிசே கொடுக்கலாம்!

@D4Dilipan 
சைனீஸ் மொழிய பாக்கும்போது நண்டு தலகீழா படுத்துக் கெடக்குற மாதிரியே இருக்கு!

 @senthilcp   
உன் காதலி உயரமானவராக இருந்தால், நீ முத்தம் தரும்போதுகூட தலைகுனியத் தேவையில்லை.