‘‘தலைவர் ஏன் நொந்து
போயிருக்கார்..?’’
‘‘கட்சிக்காரங்க கோஷ்டி
சண்டை நடத்த ஃபாரீன்
லொகேஷன்
போகணும்ங்
கறாங்களாம்..!’’
பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவர் எதுக்கு அவனை அடிக்கப் போனாரு?’’
‘‘நீங்க போட்டிருக்கற செருப்பு யாரு வீசுனதுன்னு தலைவரைக் கேட்டானாம்!’’
சி.சாமிநாதன், கோவை.
‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது ரொம்ப தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்... என்ன செய்தார்?’’
‘‘எபோலா நோய்க்கு மருந்து கண்டு
பிடிப்பேன்னு மீட்டிங்ல பேசிக்கிட்டு
திரியறார்!’’
ஆர்.மணிகண்டன், கோவை.
‘‘இருபது அடியிலே தண்ணி கிடைக்கும்னு சொன்னீங்க... 200 அடி தோண்டியும் தண்ணியே கிடைக்கலையே..?’’
‘‘இங்கிருந்து இருபது அடி நடந்து போய் பாருங்க... டாஸ்மாக் கடை ஒண்ணு இருக்கு!’’
தீ.அசோகன், சென்னை19.
‘‘டாக்டர்! என்ன செஞ்சாலும் விக்கல் நிக்கவே மாட்டேங்குது...’’
‘‘இது கொஞ்சம் ‘விக்கலான கேஸ்’... நீங்க உடனே அட்மிட் ஆகிடுங்க!’’
யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
ஸ்பீக்கரு...‘‘தேர்தல் முடிவு, அமலா பால், நஸ்ரியா கல்யாணம் போன்ற தொடர் தோல்விகளைச் சந்தித்தும் துவளாத தலைவர் அவர்களே...’’
பர்வீன் யூனுஸ், சென்னை44.
டூ வீலரோ, த்ரீ வீலரோ, ஃபோர் வீலரோ, சிக்ஸ் வீலரோ... எதுவா இருந்தாலும் பிரேக் ‘டவுன்’தான் ஆகும். பிரேக் ‘கிராமம்’, பிரேக்
‘சிட்டி’ ஆகாது! தத்துவம் சொல்வதில் ரெக்கார்டு பிரேக் செய்வோர் சங்கம்
ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.