ஜோக்ஸ்



‘‘தலைவர் இதுவரை எத்தனை தடவை கட்சி மாறி இருக்கார்..?’’
‘‘வீட்ல இருக்கற கார்களை எண்ணிப் பார்த்தாலே சொல்லிடலாமே!’’
 அம்பை தேவா, சென்னை116.

தத்துவம் மச்சி தத்துவம்

எவ்வளவு பெரிய டாக்டரா இருந்தாலும், அவர்கிட்ட ‘தலைபாரம்’னு சொல்லிக்கிட்டு வர்ற பேஷன்ட்களோட தலை பாரம் எத்தனை கிலோ இருக்கும்னு வெயிட் போட்டு எல்லாம் சொல்லவே முடியாது.
 பாரத்தை முதுகில் சுமக்காமல்
மனதிலேயே சுமப்போர் சங்கம்
 மு.மதிவாணன், அரூர்.

‘‘தலைவர் நிதானத்துல இல்லைன்னு எப்படிச் சொல்றே?’’
‘‘கட்சியில புதுசா இணைய வந்தவங்ககிட்ட, பழைய கட்சியில இருந்து நன்னடத்தை சான்றிதழ் வாங்கிட்டு வரச் சொல்றாரே!’’
 பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘எனக்கும் சில சமூகக் கடமைகள் இருக்குய்யா...’’
‘‘சரி தலைவரே... அதுக்காக, ‘வயசாகிக்கிட்டே போவதால் நடிகை நமீதாவுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்’னு நீங்க கவலைப்படறதுல அர்த்தம் இல்லை!’’ அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘‘தலைவர் பெரிய ரியல் எஸ்டேட் அதிபராவும் இருக்கார்...’’
‘‘இருக்கட்டும்... அதுக்காக, கட்சிக்காரங்களுக்கு எழுதுற கடிதங்களை ‘நிலம், நிலமறிய ஆவல்’னு தொடங்கணுமா?’’
 வி.சி.கிருஷ்ணரத்னம்,
காட்டாங்குளத்தூர்.

‘‘குற்றப்பத்திரிகையைப் பார்த்த உடனே தலைவர் கடுப்பாயிட்டாரா... ஏன்?’’
‘‘அதுல ‘இரு வீட்டார் அழைப்பு’ன்னு போட்டு ‘தங்களை அன்புடன் எதிர்நோக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் திகார் ஜெயில் அதிகாரிகள்’னு இருந்துச்சாம்!’’
 கே.ராமச்சந்திரன், சென்னை87.

தத்துவம் மச்சி தத்துவம்


என்னதான் பசி காதை அடைச்சாலும், வயித்துக்குத்தான் சாப்பாடு கொடுக்கறோம்...
 ஊண் உறக்கமின்றி உணவு உண்ணுவோர் சங்கம்
 பர்வீன் யூனுஸ், சென்னை44.