தத்துவம் மச்சி தத்துவம்



‘‘தலைவர் தூங்கறப்ப, பக்கத்துல பொன்னாடையை வச்சிருக்காங்களே... ஏன்?’’
‘‘அவருக்கு தூக்கத்துல
மீட்டிங்ல பேசற வியாதியாம்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘ஜெயிலர் மேல, தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘படிக்க பத்திரிகை கேட்டா, தலைவரோட குற்றப் பத்திரிகையை படிக்கத் தர்றாராம்..!’’
- என்.உஷாதேவி, மதுரை.

‘‘நாலு முறை நின்னு தோற்ற தொகுதியிலயே மறுபடி ஏன் நிக்கறீங்க..?’’
‘‘அனுதாப ஓட்டுல ஜெயிக்க வாய்ப்பிரு க்கே!’’
- பெ.பாண்டியன்,
கீழ சிவல்பட்டி.

ஸ்பீக்கரு...

‘‘எங்கள் தலைவர் இதுவரை யாரையும் காலை வாரி விட்டதில்லை! பல முறை மகளிரணித் தலைவிக்கு தலை வாரி விட்டுள்ளார்
என்பதை பணிவோடு கூறி அமர்கிறேன்...’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘நாம எத்தனை ஜெயிப்போம்..?’’
‘‘ஒண்ணுலகூட ஜெயிக்க முடியாது தலைவரே... உங்க மேல உள்ள எல்லா கேஸ்லயும் எவிடென்ஸ் ஸ்டிராங்கா இருக்கு!’’
- சரவணன், கொளக்குடி.

கை முறிந்தால் டாக்டரிடம் போகலாம்; கால் முறிவு வந்தால் டாக்டரிடம் போகலாம். ஆனால் கூட்டணி முறிந்தால் டாக்டரிடம் போக முடியுமா?
- கூட்டணிக்காக நடந்து நடந்து கால் வலி கண்டோர் சங்கம்
- வே.முருகேசன், சென்னை-88.

‘‘எங்க கட்சில நிற்க இடமில்லை... உங்க கட்சில?’’
‘‘நிற்க ஆளில்லை!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.