ஜோக்ஸ்

‘‘தலைவரே... ஃபேஸ்புக்ல ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்கக் கூடாதா..?’’ ‘‘அடப் போய்யா! ஏற்கனவே ஸ்விஸ் பேங்க், உலக வங்கியில எல்லாம் அக்கவுன்ட் வச்சிருக்கேன்னு கிளப்பி விடறாங்க...’’
‘‘தண்ணி போட்டுக்கிட்டு வண்டி ஓட்டினா புடிச்சிடுவீங்க... ஆனா இப்ப என்ன பண்ணுவீங்க..?’’
‘‘ஏன்னு தெரியல சார்... எங்க வீட்டு ரிமோட்டை அழுத்தினா, பக்கத்து வீட்டு டி.வி ஆஃப் ஆகிடுது..!’’
‘‘டாக்டரைப் பார்த்து ஏன் பயப்படறே..?’’ ‘‘சங்கு ஊதற சாங்கை அவர் செல்போன் ரிங் டோனா வச்சிருக்காரே!’’
‘‘ஸ்டேஷன் வாசல்ல தேங்காய் உடைச்சியாமே... ஏன் கபாலி?’’ ‘‘வாழ வைக்கிற சாமிங்க இருக்கற இடமாச்சே ஏட்டய்யா..!’’
‘‘உங்க நாய்கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல்..?’’ ‘‘வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க, ரெண்டு நாளைக்கு மேல தங்கினா இது வயலன்ட் ஆகிடும்!’’
|