ஆனாலும் தலைவர் இவ்வளவு தூரம் காதலுக்கு எதிரியா இருக்கக் கூடாது...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘இங்கு காதலர்களைப் பிரித்து வைக்கப்படும்னு அவர் வீட்டு வாசல்ல போர்டு தொங்குதே..!’’
- அம்பை தேவா, சென்னை-116.
வெளிநாட்டுல கூலிப்படை இருக்கான்னு தலைவர் கேட்கறாரே... ஏன்?’’
‘‘ஹெலிகாப்டர் ஊழல்ல அவர் பேர் வந்தா, இத்தாலியில தீக்குளிக்க ஆள் வேணுமாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.
அடிக்கடி
ஜோசியர் வீட்லயே
ஏன் திருடறே கபாலி..?’’
‘‘அங்கே ஏகப்பட்ட கைரேகைகள் இருக்கிறதால, போலீஸால என்னைக் கண்டுபிடிக்க முடியாது... அதான்!’’
- சரவணன், கொளக்குடி.
நான் அமைச்சர் ஆகிறமாதிரி முந்தா நாள் ராத்திரி கனவு கண்டேன்...’’ ‘‘அடடே... அப்புறம்?’’
‘‘நேத்து ராத்திரி வந்த கனவுல, என்னை அமைச்சர் பதவியை விட்டு நீக்கிட்டாங்க..!’’
- பாளை பசும்பொன், நெல்லை.
தலைவரே... தொகுதி மக்கள் உங்களை சந்திக்க வந்திருக்காங்க!’’ ‘‘தேர்தல் வந்தா நானே அங்க வந்து சந்திக்கிறேன்னு சொல்லி அனுப்பிடு...’’
- அ.ரியாஸ், சேலம்.
படிச்ச பட்டதாரி பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தலைவர் சொல்றாரே... ஏன்?’’
‘‘எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு வர்ற குற்றப்பத்திரிகைகளை படிச்சுக் காட்டத்தான்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
டாக்டர்... என் கணவர் தூக்கத்தில் உளர்றதை எல்லாம் ராத்திரி முழுக்க பக்கத்திலேயே உட்கார்ந்து என்னை எழுதி வைக்கச் சொல்றாரு?’’
‘‘என்ன பேசினோம்னு தெரிஞ்சுக்கவா?’’
‘‘இல்ல... அடுத்த நாள் மேடையிலே அதைப் பேசறதுக்காம்!’’
- மு.மதிவாணன், அரூர்.