சன்னி லியோன்... இந்திய வம்சாவளிப் பெண்ணான இவர்தான் அமெரிக்காவின் நம்பர் ஒன் நீலப்பட நாயகி. இந்தி சேனல் ஒன்று தனது ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவுக்காக அழைத்து வந்தபோதுதான், இவரை இந்தியாவில் பலருக்கும் தெரியும். ஆனால், இப்படிக் கிடைத்த புகழை வைத்துக்கொண்டு தனது ஆபாச பிசினஸை வளர்க்கப் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது கிளம்பியிருக்கிறது.
இவரைப் பற்றி இந்திய மீடியாக்களில் ஏராளம் செய்திகள். ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நட்சத்திரம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார் இவர். தனது நீலப் படங்களை விற்பதற்காக ஒரு இணையதளம் நடத்துகிறார் இவர். இவரைப் பற்றிய ‘பிக்பாஸ்’ செய்திகளைத் தேடுவோர் அந்த நீலப்பட விற்பனை இணையதளத்துக்கு வருகிறமாதிரி தந்திரங்கள் செய்திருக்கிறார். டி.வி. நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் ‘பிராட்காஸ்டிங் கன்டென்ட் கம்ப்ளெயின்ட்ஸ் கவுன்சில்’ இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதை நிறுத்தாவிட்டால் அவரை ஷோவிலிருந்து நீக்குவார்களாம்!
இந்த ஷோவில் பங்கேற்பதை வைத்து இந்திப் படங்களில் சான்ஸ் தேடி வந்தார் சன்னி லியோன். ஆனால் யாரும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை.
ரெமோ