கீர்த்தி பெருசா..கீர்த்தி சிறுசா..? இதுதான் பஞ்சாயத்து!
சீனியர் கீர்த்தி சுரேஷுக்கு இப்போதைய தேவை ஹிட் படங்கள். அதே பிரச்னையில்தான் ஜூனியர் கீர்த்தி ஷெட்டியும் இருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த முதல் இரண்டுபடங்கள் வெற்றி பெற்றன. ஆனால், அடுத்தடுத்த படங்கள் எதுவும் எடுபடவே இல்லை.இதனால் தமிழ் சினிமா பக்கம் வந்த கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடி என்றதும் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த ‘வணங்கான்’ படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் சூர்யா - பாலா பஞ்சாயத்தால் இந்த காம்பினேஷன் டேக் ஆஃப் ஆகவில்லை.
என்றாலும் இப்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஜூனியருக்கு கிடைத்திருக்கின்றன.ஜெயம் ரவியுடன் நடிக்கும் ஃபேண்டஸி படம் ‘ஜூனி’, ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’ என கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார் ஜூனியர் கீர்த்தி.இதுதான் சீனியர் கீர்த்தியை (சுரேஷ்)ஆட்டம் காண வைத்திருக்கிறதாம். இந்தப் போட்டியில் தமிழ் சினிமாவில் நிலவும் கதாநாயகி பஞ்சத்தைப் போக்குவதில் வெற்றி பெறப் போவது சீனியரா ஜூனியரா?
காம்ஸ் பாப்பா
|