3 வது படிக்கிறப்பவே லவ் ப்ரொபோசல் வந்திருக்கு!



கண்ணடிக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர்

‘‘என் லைஃப்ல வேலன்டைன்ஸ் டே ரொம்ப ஸ்பெஷல். போன வருஷம் அந்த தினத்துலதான் இந்த ப்ரியாவை உங்களுக்கெல்லாம் தெரிஞ்சுது! ‘ஒரு அடார் லவ்’வின் ‘wink sensation’ டீசர் வெளியாச்சு. அதாவது நான் கண்ணடிக்கிற போஸ்.அவ்வளவுதான். ஒரே நாள்ல என் இன்ஸ்டாவில் ரெண்டு மில்லியன் பேர் ஃபாலோயர்ஸா மாறினாங்க. ‘விங்க் குயின்’ பட்டமும் கிடைச்சது. எல்லாமே ஓவர்நைட் மிராக்கிள்!

அப்ப பாலிவுட் மீடியாக்கள் கூட என் இன்டர்வியூஸ் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. மறக்க முடியாத தினம். அந்த கண்சிமிட்டல் சென்சேஷன் ஹிட் அடிச்ச படம்தான் இப்ப தமிழ்ல வெளியாகுது!’’ சந்தோஷப் புன்னகையில் கண்சிமிட்டுகிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.
உங்களுக்கு லவ் ப்ரொபோசல்ஸ் வந்திருக்கா..?நிறைய! மூணாவது படிக்கிறப்பவே ப்ரொபோசல் வந்துடுச்சு! ஏழாவது படிக்கிறப்ப ஒரு இன்ஸிடென்ட். ஒருநாள் மாலை ஸ்கூல் முடிச்சு வீட்டுக்குப் போயிட்டிருந்தேன். வழில ஒரு பையன் எதிர்ல வந்தான். என் க்ளாஸ்மேட்தான்.

திடீர்னு என் கையைப் பிடிச்சு ஒரு லட்டரை கொடுத்துட்டுப் போயிட்டான்! அதைப் படிக்காமயே ஸ்கூல் பேக்ல வச்சிட்டேன். வீட்ல அப்பாகிட்ட எப்படியோ அந்த லட்டர் மாட்டிக்கிச்சு. அந்தப் பையனை தேடிப் பிடிச்சு பிச்சு உதறிட்டார். எப்ப அதை நினைச்சாலும் முகத்துல ஒரு ஸ்மைல் வந்துடும். காலேஜ் டைம்ல கூட யார் மேலயும் லவ் வரல. என் கவனம் மாடலிங் பக்கம் திரும்பிடுச்சு. மத்தபடி லவ் சாங்ஸ் ரொம்ப பிடிக்கும். தமிழ்ல ‘96’ படத்துல உள்ள ‘காதலே காதலே...’ என் ஆல்டைம் ஃபேவரிட். தமிழ் நல்லா பேசறீங்களே..?

நிஜமாவா! எங்க அம்மாவுக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். அவங்க படிச்சது கோவைலதான். தமிழ்ப்படங்கள், டிவி சீரியல்ஸ் நிறைய பார்ப்பாங்க. அவங்களோட சேர்ந்து வீட்ல நானும் தமிழ் மூவீஸ் பார்க்க ஆரம்பிச்சேன். இப்ப நான் தமிழ்ல நல்லா பேச அதான் காரணம்னு நினைக்கறேன்.

எங்க பூர்வீகம் திருச்சூர். பி.காம் ஃபைனல் இயர் படிக்கறேன். கிளாசிக்கல் டான்ஸ்ல பத்தாவது கிரேட் முடிச்சிருக்கேன். ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். ‘ஒரு அடார் லவ்’வுக்கு முன்னாடி மூணு ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிச்சிருக்கேன். வீட்ல என் சினிமா ஆர்வத்தை சப்போர்ட் பண்றாங்க.

ஆக்சுவலா ‘ஒரு அடார் லவ்’ல கமிட் ஆனதே எதிர்பாராம நடந்ததுதான். அந்தப் படத்துக்காக என்னைக் கூப்பிடறப்ப ‘உங்களுக்கு ரெண்டு மூணு சீன்ஸ் இருக்கும். அதுக்கான ஆடிஷனுக்குத்தான் கூப்பிடறோம்’னு சொன்னாங்க. கதை எதுவும் தெரியாம ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரிதான் போய் கலந்துக்கிட்டேன். செலக்ட் ஆனேன். நான் உட்பட படத்துல நடிச்ச எல்லாருமே புதுமுகங்கள். யாருக்குமே படத்தோட கதை தெரியாது. சீன்ஸ் சொல்வாங்க. நடிச்சோம்.

ஆனா, டீசர் வெளியானதும் செம பப்ளிசிட்டி கிடைச்சிடுச்சு. நான் மெயின் ரோல் பண்ணினேன்! அந்தப் பட ஷூட்டிங்ல நிறைய சுவாரஸியங்கள் நடந்திருக்கு. டீசர்ல நான் லவ் தூண்டில் போடும் ஹீரோ ரோஷன் என்னை விட ஒரு வயசு குறைந்தவர்! முதல் நாள் ஷூட்ல என்னைப் பார்த்ததும் ‘சேச்சி’ (அக்கா)னு கூப்பிட்டார். செம ஜாலி கலாட்டா அது.

நீங்க டாட்டூஸ் லவ்வராமே..?
யெஸ்... யெஸ். என் உடம்புல 5 டாட்டூஸ் இருக்கு. லேட்டஸ்ட்டா கைல ரோஸும் infinityனும் வரைஞ்சிருக்கேன். chance is infinity... love is infinity... everything is infinity இல்லையா..! டாட்டூ தவிர கிரிக்கெட் பிடிக்கும்.

எம்.எஸ்.தோனி, விஜய் சேதுபதி, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே... எல்லாம் என் ஃபேவரிட். சஞ்சய் லீலா பன்சாலி படத்துல நடிக்கணும்னு ஆசை. ஸ்கூல்ல செகண்ட் லாங்குவேஜ் இந்தி. ஸோ, மொழிப் பிரச்னை இருக்காது!ஸ்ரீதேவியின் பயோகிராபி படமான ‘பங்களா’ல நீங்கதான் ஸ்ரீதேவி போல... போனிகபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாராமே?

அந்தப் படத்தைப் பத்தி இப்ப பேசினா சரியா இருக்காது. டீசரை விட படத்துல நிறைய சஸ்பென்ஸ் இருக்கு. படத்தைப் பத்தி நிறைய வதந்திகள், கிசுகிசுக்கள் சுத்துவது நிஜம்தான். ஆனா, எதுவும் உண்மையில்ல. எந்த நோட்டீஸும் எங்களுக்கு வரல. யாரும் நேரடியா கூப்பிட்டு பேசவும் இல்ல. அத்தனையும் ரூமர். ஒரு விதத்துல இதனால அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு!

மை.பாரதிராஜா