Incidents & Replies!



ஹாஸ்டலில் தங்கி வேலைபார்க்கும் இளம் பெண் எதிர்கொள்ளும் சங்கடங்கள்...

Incident:

காலைல இருந்து ஆபீஸ்ல செம டென்சன். மதியம் அவசரமா ரிப்போர்ட் முடிச்சு ப்ரிண்ட் எடுக்கும்போது சிஸ்டம் ஹேங்காகி உசுரை வாங்கிடுச்சு. ஹெட் ஆபீஸ்ல இருந்து செம டோஸ். கடுப்பாகி ஹாஸ்டல் வந்தா, ரென்ட் 200 ரூபா ஏத்திட்டதா சொல்றானுக.

பணம் எடுக்கலாம்னா ஏடிஎம் கார்டை எங்கயோ வச்சுத் தொலைஞ்சுட்டேன். வெறித்தனமா தேடினதால ஹேண்ட்பேக் ஜிப் வேற பிஞ்சுபோச்சு. அந்த டென்சன்ல நெட்பேக் முடிஞ்சத கவனிக்கவேயில்ல!இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேன்னே தெரில. கோவமா வருது...

Different kind of Replies:
ரூம்மேட் - நாளைக்கு தண்ணி கேன் உங்க turn, பணம் குடுத்துட்டுப் போய்டுங்க!
சிஸ்டர் - உனக்கென்னம்மா... ஹாஸ்டல்ல ஜாலியா இருக்க! என்னைப் பாரு... பிள்ளையை மேய்ச்சுகிட்டு முழி பிதுங்கிகிட்டு இருக்கேன்!
சொந்தக்காரன் - இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்... வேலைக்கெல்லாம் போகாதனு!
பாய் ஃப்ரெண்ட் - அதுக்கு? இன்னைக்கு வீடியோ கால் வர முடியாதுனு சொல்றியா?!
க்ரஷ் - ம்... அப்புறம்?

ஆல்பர்பஸ் அங்கிள்ஸ் - சரி விடுங்க மேடம்... சரியாகிடும். உங்க போட்டோ கேட்டேனே..!
தோழர் - காம்யூ தன் புக்குல இதே மாதிரி ஒரு காட்சியை அழகியலோடு விவரிச்சிருப்பார்... சுந்தர ராமசாமி கூட ஒரு கவிதைல என்ன சொல்லியிருக்கார்னா...

நண்பன் - அப்பாடா... எனக்கு மட்டும்தான் இதெல்லாம் நடக்குதோனு நினைச்சேன். சியர்ஸ்!
மம்மீ - முதல்ல போய் சாப்பிட்டுத் தொல! பசியோட இருந்தா இப்டித்தான் வாலு வாலுனு கத்துவ..!

இந்திரா த/பெ ராஜமாணிக்கம்