எப்படி இருந்த நான்..!



வேறு யார்... இடை அழகி இலியானாவைப் பார்த்துதான் மொத்த இண்டஸ்டிரியும் இப்படி உச்சுக் கொட்டுகிறது. ஒருகாலத்தில் தெலுங்கு, தமிழ், கொஞ்சம் கொஞ்சம் இந்தி... என ரவுண்டு கட்டி அடித்தார் இலியானா. அவரது ஸ்லிம் இடுப்பும் யோகா பயிற்சியும் இளசுகளை சுண்டி இழுத்தன. யார் கண் பட்டதோ..? காதலில் சிக்கினார். பாய் ஃப்ரெண்டுடன் லிவிங் டுகெதர் ஆக வாழ்ந்தார். உடல் பெருத்தது. கண்டவர்கள் முகம் சுளித்தார்கள்.

உடற்பயிற்சி அது இது என எடுத்து ஓரளவு உடலைக் குறைத்து ‘அமர் அக்பர் ஆண்டனி’ தெலுங்குப் படத்தில் இடைவெளிக்குப் பின் நடித்தார். படம், பப்படம். இப்போது இன்ஸ்டாவில் இப்படி தன் படங்களைப் பதிவேற்றி வருகிறார். வாய்ப்பு கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை!         

- காம்ஸ் பாப்பா