செக்ஸ் எகனாமி!



* உலகை புரட்டிப் போடும் புதிய பொருளாதாரம்

* பத்திரிகை ஆசிரியர் ஒருவர், நிருபரை அழைத்து செக்ஸ் வலைதளங்கள் குறித்து புலனாய்வு செய்து கட்டுரை எழுதச் சொன்னார்.

ஆறு மாதம் போர்னோ வலைதளங்களைப் பற்றியும் அவர்கள் எப்படி பணம் ஈட்டுகிறார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்த அந்த நிருபர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். அதாவது ஓர் ஆண்டு அவர் சம்பாதிக்கும் பணத்தை ஒரே வாரத்தில் போர்னோ வலைதளங்கள் ஈட்டிவிடுகின்றன! அவ்வளவுதான். கட்டுரை கொடுப்பதற்கு பதில் தன் ராஜினாமாவைக் கொடுத்தார். முழுநேர போர்னோ வலைதளத்தை தொடங்கிவிட்டார்! இப்போது கலிபோர்னியாவில் மிகப் பெரிய மூன்று மேன்ஷன்களுக்கு அவர் சொந்தக்காரர்! ஒவ்வொன்றும் பல மில்லியன் டாலர்கள் விலைபோகும்!

சத்தியமாக இது கற்பனை அல்ல. நிஜம்! ஸ்மார்ட் போன், குறைந்த விலையில் 4ஜி வந்தபின் உலகம் முழுவதும் இணைய செக்ஸ் தளங்களின் வருமானம் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் சினிமாத் துறைக்கு நிகராக போர்னோ திரைப்படங்களின் துறை வளர்ந்துள்ளது. அமெரிக்காவில் மிகப் பிரபலமான போர்னோ பட நடிகை ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார் என்கிறது புள்ளிவிவரம்.

உலகம் முழுவதும் ஒரு வருடத்துக்கு குத்துமதிப்பாக 300 மில்லியன் டாலர்கள் வரை இத்துறையில் புரள்கிறது. வலைதளங்களின் வழியேதான் இவர்கள் முதலில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இன்று ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், மெசன்ஜர், ஸ்கைப், டேட்டிங் செயலிகள்... என ஆக்டோபஸ் ஆக விரிந்திருக்கிறார்கள்! இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நொடியில் கூட இந்தியாவில் பலர் தங்கள் ஸ்மார்ட் போனில் ‘பிட்டு’ பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் எதார்த்தம். ஏனெனில் இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 51% பேர் பாலியல் வீடியோக்களை மட்டுமே பார்ப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது.

எல்லாம் சரி... இதன் வழியாக எப்படி சம்பாதிக்கிறார்கள்? செக்ஸ் படங்களும் வீடியோக்களும் கொண்ட வலைதளங்கள் இன்று பெருகிவிட்டன. அதாவது இணையத்தில் இன்றிருக்கும் ஒரு மில்லியன் வலைதளத்தில் 30% ஆபாச தளங்கள்தான்! இணையப் பயன்பாட்டிலும் சுமார் 50% போர்னோ பயன்பாடுதான்!  இந்த வலைதளங்களில் இலவசமாக சிறுசிறு வீடியோக்களை பதிவேற்றி வைத்திருப்பார்கள். இதைப் பார்த்து தூண்டப்படுபவர்கள் முழு வீடியோவையும் பார்க்க விரும்புவார்கள். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்!  

அதாவது ஒரு வீடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய அல்லது மாதச் சந்தா செலுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள். அஸ்கு புஸ்கு. இலவச வீடியோக்களைத்தானே நாங்கள் பார்க்கிறோம் என்கிறீர்களா? நல்லது. அப்படி பார்க்கும் வீடியோவில் நடு நடுவே விளம்பரம் வருகிறதல்லவா..? இதன் வழியாக அத்தளம் பணம் சம்பாதிக்கிறது. இப்படி விளம்பரம் கொடுக்க பலத்த போட்டி நடக்கிறது பாஸ்! எந்தவொரு போர்னோ வலைதளத்தை திறந்தாலும் ‘பாப்-அப்’ முறையில் பத்து பக்கங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். இவை எல்லாம் விளம்பரங்கள்தான். குளிக்கும் சோப்பு முதல் கார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வரை இதில் இடம்பெறுகின்றன என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.

யெஸ். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல, ஆபாச வலைதளங்களில் விளம்பரம் செய்யவும் பன்னாட்டு நிறுவனங்கள் கணிசமான தொகையை ஒதுக்குகின்றன. ஏனெனில் இதற்குத்தான் பார்வையாளர்கள் அதிகம் என்பது அந்நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும்! அடுத்து லைவ் ஸ்ட்ரீமிங். ஏற்கனவே காட்சியாக எடுத்து வைத்த படங்கள் இப்போது போர்னோ ரசிகர்களுக்கு சலித்துவிட்டன. எனவே, டிஜிட்டல் டெக்னாலஜி உதவியுடன் லைவ்வாக காட்சிகளைப் பார்க்க பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.

ஒரு பெண் தனியாக அல்லது தன் இணையுடன் நடத்தும் அந்தரங்க செயல்கள் அனைத்தும் லைவ்வாக நகரும். அவர்களது அைனத்து நடவடிக்கைகளையும் செயல்களையும் இன்ச் பை இன்ச்சாக இருந்த இடத்தில் இருந்தே லைவ் ஸ்ட்ரீமிங் வழியே பார்த்து ரசிக்கலாம்.இப்போது ஹாட் ஆக இருக்கும் இதுதான் மிகப்பெரிய சந்தையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பணம் கட்டிவிட்டால் போதும். நபர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், செக்‌ஷுவல் ஆக்டிவிட்டி?

அது தொடரும். மட்டுமல்ல... அதிகப் பணம் செலுத்தினால் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப திரையில் அவர்கள் உறவு கொள்வார்கள்! ஏற்கனவே ஷூட் செய்த படங்களைவிட இந்த மாதிரியான லைவ் ஸ்ட்ரீம் வீடியோக்களுக்குத்தான் இப்போது ஏக டிமாண்ட்! மூன்றாவதாக, லைவ் ஸ்ட்ரீமிங்கை அப்படியே appக்கு பொருத்துவது. நம் வாட்ஸ்அப் முதல் மெசன்ஜர் வரை தகவல் தொடர்புக்கு பயன்படும் செயலிகளில் (app) படங்களாக அல்லது வீடியோ கால்களாக செக்ஸ் காட்சிகள் வந்து கொண்டே இருக்கும். ம்ஹும். இலவசமாக அல்ல. பணத்துக்கு! எவ்வளவு தொகை செலுத்துகிறோமோ அதற்கு ஏற்ப படங்களும் வீடியோ காட்சிகளும் வரும். அதாவது 7 செகண்ட் காட்சிக்கு ஒரு தொகை. 5 நிமிட காட்சிகளுக்கு ஒரு தொகை!

ஒரே படம் அல்லது ஒரே வீடியோ துணுக்கை பலருக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கிறார்கள். ஒன்று தெரியுமா..? டிக்டாக் app, ஒரு காலத்தில் போர்னோ காட்சிகள் குவிந்திருந்ததால் தடை செய்யப்பட்ட செயலிதான்! பல கட்டுப்பாடுகளுடன் இப்போது அந்த செயலி சந்தைக்கு வந்திருக்கிறது! ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நம் கையில் இருப்பது ஸ்மார்ட் போன் அல்ல. பாலியல் உறுப்பு!                             

- வினோத் ஆறுமுகம்