என்னாச்சு ‘நெஞ்சம் மறப்பதில்லை’? ரெஜினா கஸாண்ட்ரா



நீங்க தயாரிப்பாளர்கிட்டதான் கேட்கணும்! ரொம்ப வருஷங்களா நான் நடிக்க விரும்பும் கேரக்டர் அதுல கிடைச்சது. ஈடுபாட்டோடு நடிச்சிருக்கேன். அந்தப் படத்துல கமிட் ஆனப்ப ‘செல்வராகவன் சார் படமா... அவர் கோபக்காரர் ஆச்சே...’னு பலரும் பயமுறுத்தினாங்க. ஆனா, அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லி பர்சன். செட்ல ரொம்ப இயல்பா பழகினார். ஹோம் ஒர்க் செஞ்சு அதுல நடிச்சிருக்கேன். இப்ப எல்லா இண்டஸ்ட்ரீலயும் நல்ல ரோல் செஞ்சா ரசிகர்கள் வரவேற்கறாங்க. இது ஆரோக்கியமான விஷயம். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்ப ரிலீஸ் ஆனாலும் எங்க எல்லாருக்குமே நல்ல பெயர் கிடைக்கும்!  

ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் உங்க மேக்கப் சீக்ரெட்ஸ் ப்ளீஸ்..?

ஷூட்டிங்ல மேக்கப் அவசியம். அதுக்காக ஓவரா மேக்கப் பண்ணிக்க மாட்டேன். எல்லாரையும் போல பேஸிக் மஸ்காரா, லாக்மே காஜல் மாதிரி சின்னச்சின்ன
பொருட்கள்தான் என் சாய்ஸ். இந்த விஷயத்துல என் தங்கை நிஷா, பெரிய பியூட்டீஷியன் மாதிரி நிறைய டிப்ஸ் சொல்லுவா. அவ டெக்னோ கேர்ள். நீங்க அவகிட்ட கேட்டிருந்தா நிறைய அழகுக் குறிப்புகள் சொல்லி யிருப்பா! நான் ரொம்ப சிம்பிள். படப்பிடிப்பு இல்லாதப்ப கூடுமானவரை மேக்கப் அவாய்ட் பண்ணிடுவேன். முகப் பொலிவு, ஸ்கின் சுருக்கம் இதெல்லாம் இல்லாம இருக்க அலோவெரா ஜெல் எடுத்துக்குவேன். அப்புறம் ஃப்ரெஷ் ஜூஸும், தண்ணீரும் நிறையக் குடிப்பேன்!

சினிமால அரை சதம் தாண்டிட்டீங்களே..? ஹன்சிகா

யெஸ். தமிழ்ல நான் நடிக்கற ஐம்பதாவது படமா ‘மஹா’ அமைஞ்சிருக்கு. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களை இதுக்கு முன்னாடி செஞ்சதில்ல. இப்பதான் செய்யறேன்.‘ஹவா’ இந்திப் படத்துல சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டா அறிமுகமானேன். ஒரு ஷார்ட் டைம்ல இத்தனை படங்கள் செய்திருக்கேன் என்பதே சாதனைதான். அதர்வா, விக்ரம்பிரபு படங்கள் பண்ணிட்டிருக்கேன். இப்ப இண்டஸ்ட்ரீ ரொம்ப மாறியிருக்கு. ஒரு படத்தில் நடிக்கறவங்களே அந்தப் படத்தை புரொமோட் பண்றது அதிகரிச்சிருக்கு. சினிமா ஒரு டீம் ஒர்க். பட சக்சஸ், ஃபெயிலியருக்கு ஒருத்தர் மட்டுமே காரணம்னு சொல்லிட முடியாது. எல்லாருமே நூறு சதவிகிதம் உழைக்கணும். அப்படித்தான் நான் உழைக்கறேன்!

நீங்களும் பிசி... உங்க கணவர் நாகசைதன்யாவும் பிசி. ஃபேமிலிக்கு எப்படி நேரம் செலவழிக்க முடியுது?

சைதன்யாவும் சினிமால இருக்கறதால எனக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கார். கல்யாணத்துக்கு அப்புறம், அதிக நாட்கள் தேவைப்படுற அவுட்டோர் ஷெட்யூல் படப்பிடிப்புகளை குறைச்சுட்டேன். எனக்கு படப்பிடிப்பு இல்லாதப்ப அவருக்கு ஷூட் இருந்தா, அவர் கூட ஸ்பாட்டுக்கு போவேன். அதேபோலத்தான் அவரும். ஷூட் முடிஞ்சதும் டாண்னு வீட்டுக்குப் போயிடுவேன். வீட்ல நாங்க ஸ்டார்ஸ் என்பதையே மறந்துடுவோம். வீட்டு வேலைகள் செய்ய எனக்குப் பிடிக்கும். எனக்கு உதவ அவருக்குப் பிடிக்கும்! சினிமா பத்தி வீட்ல பேச மாட்டோம்! அதனாலதான் நிம்மதியா இருக்கோம்!

மாடலிங் டு சினிமா... இந்த ட்ராவல் எப்படியிருக்கு...?

நைஸ்.  பிறந்தது தில்லில. ஆனா, இங்க ஊட்டிலதான் ஸ்கூல் படிப்பை முடிச்சேன்.  காலேஜ் பெங்களூர்ல. ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறப்பவே பாக்கெட் மணிக்காக மாடலிங்  பண்ண ஆரம்பிச்சுட்டேன். மாடலிங்கைவிட சினிமால கமிட்மென்ட்டும் பொறுப்பும் அதிகம். மாடலிங்ல ஒருநாள் ஷூட் முடிஞ்சதும் கைல பணம் கிடைச்சுடும். சினிமா அப்படியில்ல. இங்க டபுள் கால்ஷீட், நைட் ஷூட் எல்லாம் இருக்கு. டயலாக் கத்துக்க வேண்டியிருக்கு. முக்கியமா நடிக்கணும்! தவிர எல்லாருமே ஒரு  ஃபேமிலியா பழக ஆரம்பிச்சுடுவாங்க. ஸோ, நமக்கான பொறுப்பு சினிமால அதிகம்!

என்னென்ன படங்கள்ல இப்ப நடிக்கிறீங்க..? ஸ்ருதிஹாசன்

இந்தியில் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்ணிட்டிருக்கேன். படத்தோட  டைட்டிலை சீக்கிரமே அறிவிப்பாங்க. ‘துப்பாக்கி’ல நடிச்ச வித்யுத்  ஜம்வாதான் ஹீரோ. இது ஒரு கேங்ஸ்டர் படம். ஆனா, பீரியட் ஃபிலிம். திடீர்னு ஒருநாள் ஸ்பாட்டுக்கு அம்மா சரிகா வந்தாங்க. யூனிட்ல இருந்த எல்லாருக்கும் அவங்களை அறிமுகப்படுத்தினேன். அப்ப ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்ல! இதுக்கு அப்புறம் அப்பா கூட ‘சபாஷ் நாயுடு’ல நடிக்கறேன். இடைல லண்டன்ல சர்வதேச மியூசிக் கம்போசிங்கை முடிச்சிருக்கேன். எலக்ட்ரானிக் மியூசிக் புரொட்யூசர் நியூக்லியா கூட சேர்ந்து ஒரு ஆல்பம் ஒர்க் போயிட்டிருக்கு. சீக்கிரமே இது ரிலீசாகும்!

தொகுப்பு: மை.பாரதிராஜா