அபாரம்



* தொடக்கத்திலேயே இந்திய அரசு ஆதார் கார்டை நெறிப்படுத்தாதது நீதிமன்றத் தீர்ப்பை இடியாப்ப சிக்கலாக்கியதை விவரித்த கட்டுரை அபாரம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்: மைதிலி, கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

* குற்றவழக்கு ஆட்கள் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதிப்பது, ஜனநாயகத்தை சாக்கடையாக்கும் என்பதே வரலாற்று உண்மை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ராஜ்குமார், குன்னூர்.

* எல்இடி பல்பாக பிரகாசிக்கும் தெலுங்கின் ரைசிங் சூப்பர்ஸ்டார் விஜய் தேவரகொண்டா, திருஷ்டி சுற்றிப்போடும் ஆணழகு!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

* பாடகர் கருணாஸ் நடிகராக மாறி பின்னர் சாதி ஏணியில் ஏறி அரசியல்வாதியாக மாறிய கதை, அதிரடி ட்விஸ்ட்டுகளுடன் சரவெடி.
- மனோகர், கோவை; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

* ஐந்து சீரியல்களுக்கு ஒரே நேரத்தில் திரைக்கதை வசனம் எழுதி சாதித்த எழுத்தாளர் பா.ராகவனுக்கு தசாவதானி போல ஐந்தாவதானி என பட்டமே கொடுக்கலாம்.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

* சென்னை மாநிலக்கல்லூரியின் தோற்றம், வரலாறு பெருமிதம் தந்தது.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி; தேவா, கதிர்வேடு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ராஜ்குமார், கதிர்வேடு; மனோகா, திருச்சி.

* ஆணழகர்களைப் பாதிக்கும் ஸ்டெராய்டு ஆபத்து பற்றிய செய்தி, அதிர்ச்சி.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; மயிலை கோபி, அசோக்நகர்.

* பட்டு அணிந்து வந்த அழகுச்சிட்டுகளின் அணிவகுப்பு ரெயின்போ அழகு.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; ஜானகி ரங்கநாதன், சென்னை; வளர்மதி, கன்னியாகுமரி; மயிலை கோபி, அசோக்நகர்.

* ‘கிட்ட நின்று சுட்ட நிலா’ சிறுகதை, ஜெட் வேகத்தில் மினி நாவலாக ரசிக்க வைத்தது.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

* பிள்ளையார் சுழி காசுகளை மட்டும் பேரார்வமாக சேகரிக்கும் அடையாறு சங்கரராமனைப் பற்றிய செய்தி புதியது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முருகேசன், கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; வளர்மதி,
கன்னியாகுமரி.

* இன்ஸ்டாகிராம் பெருசுகள், வயதைத் தாண்டிய இளமைத்துள்ளல் செய்தி.
- மயிலை கோபி, அசோக்நகர்.

* திண்டுக்கல் சாலைப்புதூரின் மண்பானைச்சோறு ஆரோக்கிய உணவுகளுக்கு சூப்பர் இன்ட்ரோ.
- ச.புகழேந்தி, மதுரை; ராம.கண்ணன், திருநெல்வேலி.

* தாவரங்கள் மீதான தாக்குதல்களையும் அவற்றை எதிர்கொள்வதையும் விளக்கிய ‘ஹோம் அக்ரி’ சிறந்த பசுமை வழிகாட்டி.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* கள்ள உறவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என விளக்கிய நியூஸ் வியூஸ் அட்டகாசம்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; மனோகர், கோவை.

- ரீடர்ஸ் வாய்ஸ்