ஸ்கூல்ல நானும் காதலிச்சிருக்கேன்!



‘இப்படி ஒரு பொண்ணு இருந்தா அப்படி உயிரைக் கொடுத்து காதலிக்காம என்ன பண்ணுவாங்க..?’ என ‘96’ படத்தில் இளம் ஜானுவாக நடித்த கௌரி கிஷானைப் பார்த்து இளசுகள் பெருமூச்சு விடுகிறார்கள்! ‘‘பெங்களூருல ஜர்னலிஸம், சைக்காலஜி, அப்பறம் லிட்டரேச்சர் படிச்சுட்டு இருக்கேன்...’’ புன்னகைக்கிறார் கௌரி.‘‘பிறந்தது கேரளா. வளர்ந்தது சென்னை. இப்ப படிப்புக்காக கர்நாடகா. அதனால மொழி எனக்குப் பிரச்னையே இல்ல.

அடிப்படைல நான் கிளாஸிக்கல் டான்ஸர். டிராமா, மேடை நிகழ்ச்சிகளை நிறைய பார்த்திருக்கேன். ஆனா, சினிமா ரொம்பவே புதுசு. ஆரம்பமே இப்படி அமர்க்களமா அமையும்னு நினைச்சுக்கூட பார்க்கலை!’’ புருவத்தை உயர்த்தும் கெளரிக்கு வீட்டில் முழு சப்போர்ட். ‘‘+2 படிச்சுட்டு இருந்தப்ப துபாய்ல இருந்த என் அங்கிள் வழியா ‘96’ வாய்ப்பு வந்தது. ஆடிஷனுக்கு போய் செலக்ட் ஆனேன். செம டீம். முக்கியமா ஆதித்யா பாஸ்கர் நல்ல ஃப்ரெண்டா ஆகிட்டாரு. இயக்குநருக்கு பெரிய பெரிய தேங்க்ஸ். பெயர் வாங்கிக் கொடுத்ததுக்காகவும், என் படிப்பு கெடாம ஷூட்டிங் வைச்சு அட்ஜஸ்ட் செய்ததுக்காகவும்.

இந்தளவுக்கு சப்போர்ட்டா மத்தவங்க இருப்பாங்களானு தெரியலை...’’ நெகிழும் கெளரி, ஜர்னலிஸ்ட் ஆகவே விரும்பினாராம்.‘‘கண் முன்னாடி எந்தத் தப்பு நடந்தாலும் என் குரல்தான் முதல்ல எதிர்த்து ஒலிக்கணும்னு விரும்புவேன். அதனாலயே பத்திரிகையாளரா மாற விரும்பினேன். இப்போதைக்கு நடிப்பு பத்தி எதுவும் யோசிக்கலை. முதல்ல படிப்பை முடிக்கணும். அப்புறம்தான் மத்தது...’’ என்ற கெளரியிடம் காதலைப் பற்றிக் கேட்டதும் அழகாக வெட்கப்பட்டார். ‘ஸ்கூல் டேஸ்ல எனக்கும் ஒரு லவ் இருந்துச்சு. ஆனா, ‘96’ அளவுக்கு அவ்வளவு தீவிரமா எல்லாம் இல்ல!’’     

- ஷாலினி நியூட்டன்