மாம்பழம் தின்றால் ஆண் குழந்தை!ஷிவ் பிரதிஸ்தான் இந்துஸ்தான் என்ற வலதுசாரி இயக்க பணியாளரான சம்பாஜி பைடே, தன் தோட்டத்திலுள்ள மாம்பழங்களை சாப்பிட்டால்  குழந்தை பிறக்கும் என்றுகூட கூறவில்லை; ஆண்குழந்தை பிறக்கும் என பகிரங்கமாக அடித்துப் பேசினார்!

மராத்தி அரசர் சிவாஜி குறித்து நாசிக்கில் நடந்த கூட்டமொன்றில் இவர் பேசியது சர்ச்சையாக, உடனே நாசிக் முனிசிபாலிட்டி குழந்தையற்ற  தம்பதிகளுக்கு மாம்பழங்களைத் தின்னக்கொடுத்து இதனை நிரூபிக்கவும், பயனடைந்த தம்பதிகளைப் பற்றிய தகவல்களையும் தரத் தயாரா? என  நோட்டீஸை சம்பாஜிக்கு அனுப்பியுள்ளது. ‘‘இந்த ரகசியம் எனக்கும் எனது தாய்க்கும் மட்டுமே தெரியும். இதுவரை 150 மாம்பழங்களை  குழந்தையில்லாத தம்பதிகளுக்குக் கொடுத்து குழந்தைச்செல்வத்தை அளித்துள்ளோம்!’’ என பெருமையாகப் பேசிய சம்பாஜியின் பேச்சுதான் அவருக்கு  சட்டரீதியிலான சிக்கலாகியுள்ளது.

ரோனி