அமேசிங்!



‘சோலோ’ படத்தின் சீக்ரெட்ஸ் மற்றும் ஸ்டில்கள் அமேசிங்.
- அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை.

‘எங் மங் சங்’ படத்தின் பெயரே சஸ்பென்ஸான அதிரி புதிரி ஐடியா!
- மயிலை கோபி, அசோக்நகர்; கே.போகன், மங்கலம்; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; சிம்மவாஹினி, வியாசர்நகர்.

அண்ணாசாலையில் புதைந்துள்ள ஏரிக்கரை வியப்பில் மூழ்கடித்த நியூஸ்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பூதலிங்கம், நாகர்கோவில்; ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர்; கே.எஸ்.குமார், விழுப்புரம்;
ராஜலட்சுமி, சென்னை.

ஆரி வேலைப்பாட்டில் கடவுள் ஜாக்கெட்டுகளா? தொட்டு கும்பிட்டால் செம குஷி, டபுள் மஜா!
- அக்‌ஷயா மாறன், திருவண்ணாமலை; பூதலிங்கம், நாகர்கோவில்; தியாகராஜன், கீழ்வேளூர்; சத்தியநாராயணன், சென்னை; சுந்தர், திருநெல்வேலி.

ஆ.இரா.வேங்கடாசலபதியின் நேர்காணல் அற்புத ருசி!
- ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர்.

தீபாவளி பரிசாக மேகாலயாவுக்கு கூட்டிச் சென்ற குங்குமத்திற்கு தேங்க்ஸ்.
- மயிலை கோபி, அசோக்நகர்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

மோகன் காந்திராமனின் அனுபவங்கள் அத்தனையும் சுவாரசிய சுனாமி.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; பாலாஜி, கர்நாடகா; மயில், திருநெல்வேலி; சிம்மவாஹினி, வியாசர்நகர்.

தீபாவளி ஸ்பெஷலில் கேரக்டர் ஆர்டிஸ்ட்களை அடையாளம் காட்டிய அக்கறைக்கு கொடுக்கணும் ஸ்வீட்!
- மயிலை கோபி, அசோக்நகர்; சுந்தர், திருநெல்வேலி.

கரடி பயம் குறைத்து அன்பு பெருக்கும் கரடி காதலன் கார்த்தி தி கிரேட்.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சிம்மவாஹினி, வியாசர்நகர்; சத்தியநாராயணன், சென்னை; சுந்தர், திருநெல்வேலி.

நடைப்பயிற்சி பற்றி பாடம் சொன்ன பா.ராகவனின் ‘இளைப்பது சுலபம்’ பொக்கிஷம்.
- பூதலிங்கம்,நாகர்கோவில்; கைவல்லியம், மானகிரி; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; சுந்தர், திருநெல்வேலி.

கோட்டை மியூசியம் புகைப்படங்கள் தீபாவளி சுற்றுலாவாக ரசனை பக்கங்கள்.
- சத்தியநாராயணன், சென்னை; நாகராஜன், திருச்சி; மனோகர், கோவை; சிவக்குமார், ரங்கம்; வளையாபதி, தோட்டக்குறிச்சி; கே.எஸ்.குமார், விழுப்புரம்; சைமன்தேவா, விநாயகபுரம்; நவாப், திருச்சி; மயிலை கோபி, அசோக்நகர்.

விவசாயத்தை அழிக்கும் சதியை அம்பலப்படுத்தும் ‘குத்தூசி’ மக்களின் உறக்கம் கலைக்கும் ஷிவசக்திக்கு பாராட்டுகள்.
- விஜயமுருகன், திருப்பூர்; சிவக்குமார், ரங்கம்.

காந்திக்கு அகிம்சை போதித்த ஹென்றி டேவிட் த்ரோவ் செய்தி புதுமையான வசீகரம்.
- மனோகர், கோவை.

மியான்மரில் ராணுவத்தினரால் துரத்தப்பட்டு இந்தியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கு மிளகாய் ஸ்ப்ரே பரிசு, மனிதநேயமற்ற செயல். சமையல் மந்திரம் செய்தியில் ஆண்களை கிண்டல் செய்கிறாரா லான்தே? 
- மனோகர், கோவை.